Timeline extension for applying for minority students scholarships : perambalur collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு :
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைக்கான பள்ளி படிப்பு (Prematric) மற்றும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பள்ளி மேற்படிப்பு (Postmatric) பயிலும் கிறித்துவர் / இஸ்லாமியர் / புத்த மதத்தினர் / சீக்கியர் / பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சார்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை (Prematric Scholarship) திட்டத்தின் கீழ் 2017-2018-ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைக்கான பள்ளி படிப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கான புதியது (ம) புதுப்பித்தல் மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை http://www.scholarships.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணக்கர்கள் விண்ணப்பிக்க காலக்கெடு 30.09.2017 வரையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே, சிறுபான்மையின மாணக்கர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையலாம், என அறிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497