Tomorrow’s Legal Assistance and Awareness Camp in Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் கிராமம் கடைவீதி, பிள்ளையார் கோவில் அருகே நாளை மாலை 5.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.

பெரம்பலூர் மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.பாலராஜாமாணிக்கம் தலைமையில் நடக்கிறது. பெரம்பலூர் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி என்.விஜயகாந்த், தலைமை குற்றவியல் நடுவர் நீதித்துறை நடுவர் எம்.சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிபதி ஜெயந்தி, ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

சார்பு நீதிபதி வினோத அனைவரையும் வரவேற்கிறார். பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஈ. வள்ளுவன்நம்பி , அட்வகேட்ஸ் அசோசியேசன் தலைவர் பிச்சைப்பிள்ளை ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

முகாமில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் கலந்து கொள்ள உள்ளனர். பொதுமக்கள் சிவில், கிரிமினல், ஜீவானம்சம், மோட்டார் வாகன விபத்து உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக வழக்கறிஞர் வைத்து வழக்கு தொடருதல் வழக்கை எதிர் கொள்ளவும், பிணையில எடுத்தல், தொழிலாளர் பிரச்சனைகள், பெண்கள் வன்கொடுமை தொடர்பாகவும், பட்டா மாற்றம், முதியோர் உதவித் தொகை மற்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மனு அளித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!