Under the Chief Minister’s comprehensive insurance scheme, free medical camp in Kunnam on behalf of Perambalur Arputhaa Hospital!
பெரம்பலூர் அற்புதா மருத்துவமனை சார்பில், குன்னம் கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவமுகாம் நடைபெற்றது. அம்மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர். சாமுவேல் தேவக்குமார் தலைமையில், மருத்துவக் குழு சிறப்பாக செயல்பட்டு சிகிச்சை அளித்தனர்.
முகாமில், பொது மருத்துவம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதயநோய், பொது அறுவை சிகிச்சை, பொது அறுவைசிகிச்சை, குழந்தை மருத்துவம், பெண்களுக்கான மருத்துவம், சிறுநீரக கற்களுக்கான மருத்துவம், புற்றுநோய், உணவுக்குழாய், இரைப்பை, குடல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் பயன்பெற்றனர். இதில், அனைவருக்கும், ஆலோசனைகள், மருந்துகள், இரத்தபரிசோதனை, ஈசிஜி இலவசமாக வழங்கப்பட்டது. இதில் அறுவை சிகிச்சை தேவைப்பட்டோருக்கு, முதலமைச்சர் காப்பீடு, திட்டத்தின் கீழ், அற்புதா மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
முகாமிற்கான ஏற்பாடுகளை 20க்கும் மேற்பட்ட அற்புதா மருத்துவமனையை சேர்ந்த பணிக் குழுவினர் செய்திருந்தனர். அற்புதா மருத்துவமனை கடந்த 18 ஆண்டுகளாக, சுமார் 160க்கும் மேற்பட்ட இலவச மருத்துவமுகாம்களை நடத்தி மாவட்டத்தில் உள்ள சாமானிய மக்களின் நோய்களை தீர்த்து, சமுதாயத்தில் தங்களுக்கான பங்களிப்பை செய்து வருவதாகவும், வரும் நாட்களிலும், மாவட்டத்தில் சில கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்த இருப்பதாக அற்புதா மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர்.சாமுவேல் தேவக்குமார் தெரிவித்துள்ளார்.