unidentified vehicle collided near the deer, fox death near in perambalur
பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வி.களத்தூர் பிரிவு சாலை பகுதியில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி அழகிய பெண் புள்ளி மான் மற்றும் ஒரு நரி உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்து கிடந்த மான் மற்றும் நரியின் உடலைக்கைப்பற்றி வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து மான் மற்றும் நரியின் உடலை கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் வனப்பகுதியில் வனத்துறையினர் அடக்கம் செய்தனர்.