Upavadi Vadi Neer Payanalikal sanga Election: Perambalur Collector Notification!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில், சின்னாறு உப வடிநிலம், சுவேதாநதி உபவடி நிலம், மேல்வெள்ளாறு உபவடி நில மற்றும் கீழ்வெள்ளாறு உபவடி நிலப்பகுதிகளில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மன்ற தொகுதி உறுப்பினர்கள் தேர்தல் நடக்கவுள்ளது.

இதற்கான வேட்புமனு படிவங்கள் பெரம்பலூர், வேப்பந்தட்டை மற்றும் குன்னம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கப்படும். பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவார். வேட்பு மனுக்கள் வரும் 26.09.2022 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெறப்படும். தகுதியுள்ள வேட்புமனுக்களின் பட்டியல் வரும் 30.09.2022 அன்று வெளியிடப்படும்.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற 30.09.2022 அன்றே கடைசி நாள் ஆகும். போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்தல், தேர்தல் சின்னம் ஒதுக்கீடு பணி 30.09.2022 மாலை 4 மணிக்கு மேல் நடைபெறும்.

வாக்கு பதிவு அக்டோபர் 8-ம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒப்புதல் செய்யப்பட்டுள்ள வாக்குசாவடி மையங்களில் நடைபெறும். அக்டோபர் 8 அன்று மாலை 4 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலில் போட்டியிட விரும்பும் நில உரிமைதாரர்கள் தலைவர் பதவிக்கு ரூ.300, ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கு ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!