Water apple near Perambalur: Farmer suffers from inability to sell!

பெரம்பலூர் அருகே ஆப்பிள் என வாங்கி நடவு செய்த மரத்தில் வாட்டர் ஆப்பிள் பழங்கள் கொத்து கொத்தாக காய்த்து குலுங்கின்றன.

5 வாரத்தில் சுமார் 100 கிலோ பழங்கள் மகசூல் கிடைத்தும், விற்பனை செய்ய முடியாமல் விவசாயி அவதிப்பட்டு வருகிறார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாண்டகபாடி கிராமத்தை சேர்ந்த கருணாநிதி என்ற விவசாயி வேளாண் கருத்தரங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோடு, ஆரஞ்சு, சாத்துகுடி போன்ற மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் குளிர்பிரதேச மரக் கன்றுகளை சோதனை முறையில் வாங்கி வந்து தனது நிலத்தில் பயிரிட்டு வந்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிள் கன்று ஒன்றை வாங்கி வந்து நட்டு பராமரித்து வந்தார். அதில், கோயில் மணிவடிவில் கொத்து கொத்தாக பழங்கள் காய்த்து குலுங்கின. இதைக் கண்ட விவசாயி காருணாநிதி தோட்டகலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது இந்த பழங்கள் வாட்டர் ஆப்பிள் என்று தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் அதிகம் பயன்பாட்டில் உள்ள இந்த பழம் ரோஜா ஆப்பிள். நீர் ஆப்பிள், மற்றும் ஜாம்பழம் என்று அழைப்பார்கள், மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த பழம் மலைப் பிரதேச தாவரம் என்றும் கூறியுள்ளனர்.

ஒரே மரத்தில் 5 வாரத்தில் சுமார் 100 கிலோ வாட்டர் ஆப்பிள் பழங்களை அறுவடை செய்தாலும், மக்களுக்கு அறிமுகமாகத்தால் இவற்றை விற்பனை செய்ய முடியவில்லை என்றும்,

உழவர்சந்தையில் இதற்கு விற்பனை விலை நிர்ணயம் செய்யக் கூட அலுவலர்கள் இணைய தளத்தில் விபரம் தேடும் நிலை உள்ளதாக வேதனையுடன் விவசாயி கருணாநிதி தெரிவித்தார்.

கொத்து கொத்தாய் இந்த மண்ணில் மகசூல் தரும் வாட்டர் ஆப்பிளை அதிகளவில் சாகுபடி செய்யவும், சந்தைப்படுத்தவும் அரசு உதவ வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!