what bro! Too Late Bro!! Opposition parties pasted posters!! Killi who did not touch the last 1 km victory line due to the march!! Speech in Ariyalur! Missing Perambalur!!

பெரம்பலூரில், நேற்று வானொலித் திடலுக்கு, தவெக தலைவர் விஜய் மக்களை சந்திக்கும் பிரச்சார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு பேசுவார் என ஆயிரக்கணக்கானோர் மணிக்கணிக்கில் நள்ளிரவு வரை காத்திருந்த வேளையில், பெரம்பலூர் வந்த தலைவர் விஜய் சுமார் 1 கி.மீ தூரத்தில் இருந்த வானொலித் திடலுக்கு வராமல் பாலக்கரை வழியாக திரும்பினார். இதில், முதல் பரப்புரை பயணம் என்றாலும், திட்டமிட்ட நேரத்தில் செயல்பட முடியாமல் போனது. இது தொண்டர்களை மிகவும் வருத்தமடைய செய்தது.
திருச்சி ஏர்போர்ட் முதல் மரக்கடை வரையிலும், திருச்சி – அரியலூர் வரை பரப்புரைக்கான எடுத்துக் கொண்ட நேரம் மிக மிக அதிகம். கடந்த காலங்களில் எம்.ஜி.ஆரை பார்க்க நின்றது போல வெறித்தனத்துடன் கூட்டம் நள்ளிரவு தலைவர் விஜயை பார்க்க வேறு எந்த தலைவருக்கும் இல்லாத வகையில் ஆவலுடன் குழந்தைகள், பெண்கள் அதிக அளவில் பல மணி நேரம் காத்திருந்தும், ஏமாற்றம் அடைந்தனர். பல கிராம மக்களுக்கு ஊர்களுக்கு திரும்பி செல்லக் கூட பஸ்கள் இல்லாத நிலையில் வந்திருந்தனர்.
இனி வரும் காலங்களில், தலைவர் விஜய் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், உரிய காலத்தில் வந்து சேர உடனிருக்கும் நிர்வாகிகள் எங்கு நிற்க வேண்டும், எங்கு பேசவேண்டும், எந்த ஊருக்கு எது சரியான வழி? கூட்டத்தை அடையும் வழி எது முறையான திட்டமிட்டு வழிகாட்டல் செய்ய வேண்டும். நேற்று காலை முதல் தவெக தலைவர் விஜய் தொடங்கிய பிரச்சாரம், கடைசியில் சுமார் 1 கி.மீ தூரத்தால் இருந்து பரப்புரை இடத்தை அடையும் நேரத்தில், விஜய் திரும்பியதால், வெண்ணெய் திரண்டு வரும் போது சட்டியை உடைத்த கதையாகி, அவருக்கெதிராகவே அதிருப்தியை ஏற்படுத்தி விட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றர். வரும் காலங்களில் விஜய் இந்த நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, அடுத்த பரப்புரையை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். இந்த சம்பவம் எதிர்க்கட்சியினர்களுக்கு நல்ல வாய்ப்பாகி விட்டது. போஸ்டர், மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகின்றனர். யதார்த்தையும், மக்கள் சிரமத்தையும் தலைவர் விஜய்க்கு உடனிருப்பவர்கள் எடுத்துக் கூற வேண்டும்.
பெரம்பலூருக்கு பிரதமராக இருந்த ராஜுவ்காந்தி, முதலமைச்சாராக கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், வை.கோ, ராமதாஸ் உள்பட வாலிப, வயதில் மூத்த பல தலைவர்கள் வந்து பிரச்சாரம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மிகவும் அல்லல்பட்டவர்கள் தொலைக்காட்சி செய்தியாளர்களே, குன்னத்தில் வீட்டின் மீது நின்று தலைவர் விஜயை வீடியோ எடுக்க கேமரா ஒன்றுக்கு ரூ. 500 வாடகை கொடுத்ததுடன், இன்டர்நெட்டுக்கும் ரூ. 3 ஆயிரம் கட்டி சிரமப்பட்டனர். திருச்சியில் பேசியது புரியாததால், அரியலூருக்கு திருச்சி செய்தியாளர்களும் அரியலூருக்கு வந்துள்ளனர். நள்ளிரவு வரை பெரம்பலூரில் பெரும் சிரமத்திற்கு மத்தியில் காத்து கிடந்தனர். நிகழ்ச்சி ரத்தான தகவல் வெளியானதால், செய்தியாளர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியுடன் கலைந்து சென்றனர்.
அரசியல் என்பது தனிப்பட்ட வாழ்க்கை அல்ல!! அது சமூக மாற்றத்திற்கான திறவுகோல் என்பதை அரசியல்வாதிகள் அனைவரும் உணரவேண்டும்.










kaalaimalar2@gmail.com |
9003770497