When selling harmful alcohol, why ban toddy ?. BJP agriculture team demands first!

பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு நம்பிக்கை ஊட்டின.ஆனால் எதிர்க்கட்சிகளின் ஏகோபித்த சதியால்,மத்திய அரசு தன்னால் சட்டத்தின் நன்மையை விவசாயிகளிடம் எடுத்துச்சொல்ல,செல்ல இயலவில்லை எனக்கூறி சட்டங்களை திரும்ப பெற்றுவிட்டது.தமிழக முதல்வர் அதை வரவேற்று அறிக்கை விட்டால் மட்டும் விவசாயிகள் வாழ்வில் ஒளி பிறக்காது.வருமானம் தேவை.

தங்கள் தந்தையின் மலிவு விலை மதுவில் துவங்கி இன்றுவரை தமிழகத்தில் மதுகுடிப்போரின் எண்ணிக்கை தோரயமாக 1 கோடி,தமிழ்நாடு அரசுக்கு ஆண்டு வருமானம் 33,811கோடி.இந்த கெடுதலான ஐ.எம்.எஃப்.எல்(IMFL) மதுவால் உடலுக்கு எவ்வித நன்மையும் இல்லை. கடுமையான மன நோய்,கல்லீரல் பாதிப்பு.கொலை,கொள்ளை கணக்கிலடங்காதவை.இவ்வருமானத்தில் பங்குபெறுவது ஆளும் அரசியல் கட்சியும்,அதன் ஆதரவாளர்களும்,அதன் தலைவர்களுடன் அரசு மட்டுமே.பல குடும்பங்களின் துயரங்களுக்கு மதுவே காரணம்.

கள் தாய்ப்பாலுக்கு இணையான சிறந்த உணவு.கள்ளுக்கான தடையை நீக்குவதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயரும்.கள் ஏற்றுமதி தொழிற்சாலைகள்,உள்ளூர் விற்பனை விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும்.எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் கனிவுடன் பரிசீலித்து கள்ளுக்கான தடையை நீக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!