With the onset of the northeast monsoon, caution is needed when using public waterways; Perambalur Collector V. Shantha

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள ஏரி, கண்மாய், குளம் போன்ற நீர்நிலைகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குழந்தைகள் மற்றும் சிறுவர்களை தனியாக பெரியவர்கள் துணை இன்றி நீர் நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது.

மழைக்காலங்களில் பொதுமக்கள் குளோரின் கலந்த குடிநீரை மட்டுமே குடிநீருக்கு பயன்படுத்த வேண்டும். காய்ச்சிய பின்பே குடிக்க வேண்டும். மழைக்காலங்களில் பல்வேறு பொருட்கள் கலந்து அசுத்தமாக இருக்கும் நீர்நிலைப் பகுதிகளில் உள்ள நீரினை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மழைப் பொழிவின்போது நீர்வரத்து வாய்க்கால் பகுதிகளை கடக்க முயல்வதை தவிர்த்திட வேண்டும். மழை நீரின் மூலம் டெங்கு கொசுக்கள் எளிதில் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் மழை நீர் வீட்டைச் சுற்றி தேங்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

தங்களது இருப்பிடங்களைச் சுற்றி டெங்கு கொசுக்கள் உருவாவதற்கு காரணங்களாக உள்ள தேங்காய் மட்டை, டயர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தி சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் பராமரித்திட வேண்டும். மழைக்காலங்களில் ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் மாவட்ட மக்களுக்கு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!