Women over 40 should get a mammogram at least once a year; says Dr. Kathiravan, Radiologist at Perambalur Scan Center!

பெரம்பலூர், சங்கு பஸ் ஸ்டாப் அருகில் உள்ள பெரம்பலூர் ஸ்கேன் சென்டர் நிறுவனர் ரேடியாலாஜிஸ்ட் டாக்டர் கதிரவன் தெரிவித்தாவது; கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக, பெரம்பலூர் மாவட்ட அனைத்து மருத்துவர்களின் நம்பிக்கையையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் பெற்று, சிறப்பாக ஸ்கேன் வசதி, ஸ்கேன் மருத்துவம் செய்து வருகிறோம். இங்கு, ஸ்கேன் அதிகளவில் கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்படுகிறது. எங்கள் ஸ்கேன் சென்டருக்கு அதிக பயனாளர்கள், கர்ப்பிணிப் பெண்களே!

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் முற்றிலும் பாதுகாப்பானது. எந்த ஒரு வகையிலும் குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ, கர்ப்பிணிப் பெண்களுக்கோ எந்த வகையிலும் தீங்கோ, பக்க விளைவுகள் இல்லாத முறையாகும். டாப்ளர் ஸ்கேனும் இங்கு பார்க்கப்படுகிறது. இது தவிர எக்ஸ்ரே, மேமோகிராம் ஆகியவையும் இங்கு சிறப்பாக புதுப் பிரிவுகளாக அமைந்துள்ளது.

நான் கர்ப்பிணிப் பெண்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்வெனில், மருத்துவர் பரிந்துரையின்படி, எத்தனை ஸ்கேன் செய்ய சொல்கிறார்களோ, அத்தனை முறையும் பார்த்துவிடுவது நல்லது. எப்பொழுதுமே முதல் ஸ்கேன் கருத்தரித்து 7 வாரத்தில் இருந்து 10 வாரத்திற்குள் பார்த்துக் கொள்வது நல்லது. அது கருவில், கர்ப்பப்பையில் சரியாக கரு அமைந்திருக்கிறதா என்பதை கண்டறியவும், இதயத் துடிப்பு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவும், கர்ப்பப்பையைத் தாண்டி வெளியே, கர்ப்பப்பைக்கு வெளியே அது கருத்தரித்து அதாவது தீங்கு விளைவிக்கக்கூடிய நிலையில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவும் அது பயன்படும்.

அடுத்ததாக, 12 வாரம் முதல் 14 வாரத்திற்குள் ஒரு என்டி ஸ்கேனையும், அதனோடு சேர்ந்து டூயல் மார்க்கர் என்ற சில இரத்த டெஸ்ட்களும் சேர்த்துப் பார்த்துக் கொண்டால், பிறக்கும் குழந்தை, மன வளர்ச்சி குன்றிய குழந்தையாக அமைவதற்கு வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அது துல்லியமாக தெரியும், அதனால், அந்த ஸ்கேனையும் பார்ப்பது நல்லது. பிறகு 20 வாரத்திற்குப் பிறகு, குறைபாடு எதுவும் உள்ளதா என்பதையும் பார்த்துக் கொள்வது. ‘டீடெய்லான’ குறைபாடு ஸ்கேன் அது. அதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். 30 வாரத்தில், வளர்ச்சி ஸ்கேன் பார்க்க வேண்டும். அதன் பிறகு, பிரசவம் நெருங்கும் நேரத்தில் குழந்தையின் பொசிஷன், பனிக்குட நீர் போன்றவற்றையும், அதனுடன் குழந்தைக்கு செல்லும் இரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதுபோல, பெரம்பலூர் ஸ்கேன் சென்டரில் மேமோகிராம் உள்ளது. 40 வயதிற்கு மேல் உள்ள அனைத்துப் பெண்களும் வருடம் ஒருமுறையாவது மார்பகப் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை முகாமிலோ, அல்லது பரிசோதனையோ செய்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த டிஜிட்டல் எக்ஸ்ரே மேமோகிராம் உதவும். அனைத்து மக்களும் ஸ்கேன் வசதியைப் பயன்படுத்திக் கொண்டு நலமுடன் வாழ வேண்டுமென பெரம்பலூர் ஸ்கேன் சென்டர் சார்பில் வாழ்த்துகிறோம் என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!