Women self-help groups of products, the College Market
பெரம்பலூர் : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரி மாணவ மாணவியர்களின் மத்தியில் பிரபலப்படுத்தவும், மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையை அதிகரித்திடும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் “கல்லூரி சந்தை” என்ற பெயரில் மூன்று நாட்கள் விற்பனை கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான கல்லூரி சந்தை ஸ்ரீசாரதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று (06.09.2017) முதல் (08.09.2017) வரை நடைபெற உள்ளது. இக்கல்லூரி சந்தையினை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் கு.செல்வராசு தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் பெரம்பலூர் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுடன், திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், ஈரோடு போன்ற பிற மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் பங்கேற்று தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்தினர்.