Work issue in Perambalur: Tarna protest at pregnant woman collector’s office from 10 am to 10 pm!

பெரம்பலூர் மாவட்டம், இரூர் கிராமத்தை சேர்ந்த ராஜா( வயது 35), மனைவி சவீதா ( வயதூ 34), கடந்த 2014ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக வேலை பெற்ற இவர், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுகன்பூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக கடந்த இரண்டரை வருடமாக பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே கடந்த 8 மாதத்திற்கு முன்னர் தற்காலிக பணியிட மாறுதலில் அவரது சொந்த ஊரான இரூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில்
நிறைமாத கர்ப்பிணியாக
உள்ள தனக்கு தற்போது பணியாற்றி வரும் இரூர் கிராமத்திலேயே நிரந்தர பணியிட மாறுதல் வழங்கிட வேண்டுமென நீண்ட காலமாக அரசு அதிகாரிகள் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த சவீதா நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை கண்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கவிதாவை தடுத்து நிறுத்தி நாளை காலை வருமாறு அறிவுரை கூறி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் வந்த சத்துணவு அமைப்பாளர் சவீதா
கலெக்டர் அலுவலக இரண்டாவது மாடியில் உள்ள சத்துணவு அலுவலகம் முன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் சவீதாவை சமாதானப்படுத்தி அழைத்து சென்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி காத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மாலை 6 மணிக்கு மேல் ஆன நிலையில் அலுவலகம் அனைத்தையும் அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் பூட்டி விட்டு பதில் எதுவும் தெரிவிக்காமல் சென்றதால், மன வேதனை அடைந்த சத்துணவு பணியாளர் சவீதா தனக்கு பணியிட மாறுதலுக்கான உத்தரவு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என உணவு எதுவும் எடுத்து கொள்ளாமல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த சத்துணவு திட்ட அதிகாரிகள் மற்றும் மாதர் சங்கம் உள்ளிட்ட மகளிர் காவல் நிலைய போலீசார் சவீதாவிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தற்காலிகமாக தர்ணா போராட்டத்தை கைவிட்டு சத்துணவு அமைப்பாளர் சவீதா வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவர் நிரந்தர பணியிட மாறுதல் கோரி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணி நேரம் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!