World Breastfeeding Week Celebration in perambalur
தாயப்பாலின் முக்கியத்துவத்துவம் குறித்து தாய்மார்களிடயே அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 1 முதல் 7 -ம் தேதி உலக தாய்பால் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அதனை முன்னிட்டு தாய்பாலின் அவசியத்தை தாய்மாகளிடம் கொண்டு செல்லும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்டபட்டு வருகின்றன.
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தாய்மார்களிடையே தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்திடும் வகையில் இன்று துறையூர் சாலையிலுள்ள கல்வித்துறை கூட்ட அரங்கில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துமீனாள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.