World Day for the Elimination of Child Labor: Collector-led Civil Servants Pledge Language Acceptance in Perambalur!

ஆண்டுதோறும் சூன் மாதம் 12 ஆம் நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பெரம்பலூரில் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடந்தது.

“இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்” என்ற உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க, அனைத்து துறை பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

14 வயதிற்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் எவ்வித பணியிலோ அல்லது தொழிலிலோ ஈடுபடுத்தக் கூடாது. அவ்வாறு மீறி அமர்த்தினால் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து ரூ.50 ஆயிரம் அபராதமோ அல்லது 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையிலான கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!