World Forest Biennial School in Namakkal, competitions for college students

நாமக்கல்லில் உலக வன உயிரின வார விழாவை முன்னிட்டு தெற்கு அரசு பள்ளியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது.

தமிழக வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா ஆண்டு தோறும் கொண்டாப்படுகிறது. அதன்படி இந்தாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, ஓவியம், தமிழ், ஆங்கில வழி பேச்சுப்போட்டிமாவட்ட வனத்துறை ஏற்பாடு செய்யப்பட்டது.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஓவியம், பேச்சுப்போட்டி நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் காஞ்சனா போட்டியை துவக்கி வைத்தார்.

வனச்சரகர்கள் ரவிச்சந்திரன், பெருமாள், அறிவழகன், உதவி வன பாதுகாவலர் சக்திவேல், வனவர்கள், வன பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போட்டியில் 45 அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வன உயிரின வாரவிழாவில் பரிசு வழங்கப்படும். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட வனத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!