You can make an employment office registration in the 10th grade certification school
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று கொண்டு செல்ல வேண்டும். வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.
பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.
மேலும் www.tnvelaivaaippu.gov.in , என்ற வேலைவய்ப்புத்துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற வேலைவய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.