Youth hacked to death in Perambalur! Another teenager injured! A gang of 5 went berserk!!
பெரம்பலூர் பெரியார் சிலைக்கு பின்புறம் உள்ள தோமனிக் பள்ளி அருகே திருவள்ளுவர் தெருவில், இன்று மாலை 5 பேர் கொண்ட கும்பல் வாலிபரை வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளுவர் தெருவை சேர்ந்த கோபால் என்பவரின் மகன் அர்னால்ட் (எ) வினோத் (28 ). மொபைல் கடையில் செய்து வந்தார். கடந்த ஒரு வேலைக்கு போகமல் வீட்டில் இருந்துள்ளார். கிடைக்கும் வேலை செய்து வந்துள்ளனர். இவருடன் அவரது நண்பர் கார்த்திக்கும் இருந்துள்ளார்.
இன்று காலை அவர் வசிக்கும் தெருவில் மற்றொரு தரப்பினருக்கும், வினோத் தரப்பினருக்கும், தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக இன்று மாலை 5 பேர் கொண்ட கும்பல் வினோத்தை அவரது வீட்டினருகே வெட்டி கொன்றது. மேலும், உடனிருந்த வினோத்தின் கூட்டாளி கார்த்திக்கும், கும்பலால் வெட்டுக்காயம் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர்.
இதனால், அப்பகுதியே பரபரப்பானது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத்தின் உடலை கைப்பற்றி, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் மேலும், அசாம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் போலீசார் அருகில் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொலையாளி பிடிக்க தீவிரமாக ஈடுபட்டுள்னர்.