“Youth Skill Festival” to create employment: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ஊராட்சி ஒன்றியம் வாரியாக “இளைஞர் திறன் திருவிழா” நடைபெறவுள்ளது. இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விழிப்புணர்வு மூலமாக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதனடிப்படையில் பெரம்பலூர் ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு 27.08.2022 அன்றும், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு சேர்ந்தவர்களுக்கு 03.09.2022 அன்றும், ஆலத்தூர் ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு 10.09.2022 அன்றும், வேப்பூர் ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு 17.09.2022 அன்றும், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்பட உள்ளது.

இதில், காளான் வளர்ப்பு, அழகு கலை பயிற்சி, சணல் பை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. எனவே, ஊரக பகுதிகளைச் சேர்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை அடையாள அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம் என்றும், மேலும் விபரங்களுக்கு 9444094325 மற்றும் 04328-225362. என்ற எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறும் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!