பெரம்பலூர்: சின்னாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முடி திருத்தும் தொழிலாளி பலியானார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், சர்க்கரை ஆலை எறையூரை சேர்ந்தவர் சோலைமுத்து (50). இவர் அந்த பகுதியில் முடிதிருத்தும் கடை வைத்துள்ளார்.இவர் இன்று மாலை சொந்த பணியின் காரணமாக பெரம்பலூருக்கு சென்றுவிட்டு மீண்டும் எறையூருக்கு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்துள்ளார். எறையூர் அருகே சின்னாறு பகுதியில் உள்ள சாலையை கடக்கும் போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சோலைமுத்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் விரைந்து சென்று சோலைமுத்துவின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனத்தையும் தேடி வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497