பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே துறைமங்களம் பங்களா ஸ்டாப்பில் முன்னே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் அதிஷ்டவசமாக சிறு,சிறு காயங்களுடன் மாணவ, மாணவிகள் உயிர் தப்பினர்.
இதனிடையே விபத்து பற்றி அறிந்தது சம்பவ இடத்தில் ஏரளமான பெற்றோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்து இன்று மாலை 50க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ,மாணவியர்களுடன் துறைமங்கலம் பங்களா பஸ் ஸ்டாப் என்ற இடத்தில் வந்த போது திருச்சி நோக்கி முன்னே சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தின் பின் பகுதியில் மோதியது.
இந்த விபத்தில் அரசுப்பேருந்தின் பின் பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து விழுந்து சேதமடைந்தது. தனியார் பள்ளி பேருந்தில் பயணித்த பள்ளி 10க்கும்மேற்ப்பட்ட மாணவ,மாணவியர்கள் சிறு, சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய போதும் இந்த திடீர் விபத்தினால் பதட்டமானதால் சப்தமிட்டு அழுதனர்.
இது தகவலறிந்த மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பள்ளிபேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதே விபத்திற்கு காரணம் என தெரிய வந்தது.
இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுநர் காத்தவராயன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி பேருந்து ஓட்டுநர் சின்னபிள்ளையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.