கோயில் சொத்து கோயிலுக்கே என்பதை வலியுறுத்தியும் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரியும் வருகிற 29-ந்தேதி மாநலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர்க.பக்தவச்சலம் பேட்டி அளித்தார் அப்போது ,தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களின் சொத்துக்கள் குறித்து முழு விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் இது ஊழலுக்கு வழி வகுக்கும் என்றும் கூறினார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்து அறநிலையத்துறை கோவில்களை நிர்வகித்து வருவதாகவும் அப்படி நிர்வகிக்கப்ப்டு வருவதாக கூறப்படும் கோவில்களில் 10 ஆயிரம் கோவில்களை காணவில்லை என்றும் அந்த கோவில்களுக்கு அதிகாரிகளை போட்டு ஊதியம் வழங்ங்கப்பஃடும் அவலம் இருப்பதாகவும் கூறினார். சாலை விரவாக்கம் என்ற பெயரில் கோவில்கள் அகற்றப்படும் போது அறநிலையத்துறை வாய் மூடி மவுனபம் காப்பது ஏன் என்றும் பக்தவச்சலம் வினா எழுப்பபினார். சிலை கடத்தல் வழக்கில் மிக சதுர்யமாக பணியாற்றிய அதிகாரி பொன்.மாணிக்க வேலுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக கூறிய அவர் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கூறினார்.கோவில்களில் பக்தரகள் கற்பூரம் ஏற்றி வழிபட்த்தான் வருகின்றனர் அதற்கு தடை விதிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் வினா எழுப்பினார்.. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந்தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது மாநில செயலாளர் டி. மனோகர் , மாநகர தலைவர் ஏ.டி.இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!