ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் பிரதிநிதிகள் குழு செவ்வாய்க்கிழமையன்று முதலமைச்சரைச் சந்தித்து ஊடக சுதந்திரத்தைப் பேணுவதற்கு கோரிக்கை வைத்தது; இந்தச் சந்திப்புக்கு முன்னதாக அரசு கேபிளில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த புதிய தலைமுறை, நியூஸ் 7 சேனல்கள் பழைய இடங்களுக்குத் திரும்பியுள்ளன. ஊடக நிறுவனங்களும் செய்தியாளர் அமைப்புகளும் ஒன்றுபட்டால் மாற்றம் சாத்தியம் என்பதற்கான அறிகுறி இது. கலைஞர் செய்திகள் உள்ளிட்ட பிற செய்தி சேனல்களுக்கு இன்னமும் தீராத பிரச்சினைகள் இருப்பதும் இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள், ஊடக நிறுவனங்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது