பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகேயுள்ள நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சரவணன் மகன் சதீஸ் (15) பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார், இந்நிலையில் மாணவன் சதீசுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது.
பெரம்பலூர் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்த பரிசோதனையில் மாணவன் சதீசுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. இதைதொடா;ந்து தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட சதீஸ் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். மாணவனை இழந்து வாடும் குடும்பத்தினரை இன்று மக்கள் நல கூட்டணி பொறுப்பாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
பின்னர், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திருவளக்குறிச்சி ஆனந்தி, அந்தூர் மனோகரன், பட்டூர் மருதமுத்து ஆகியோரை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக காய்ச்சலில் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு போதிய மருத்துவ வசதிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அளிக்க வேண்டும் காய்ச்சலால் உயிரிழந்த மாணவன் சதீசின் குடும்பத்திற்கு உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மக்கள் நல கூட்டணி சார்பில் வலியுறுத்தப்படுகிறது என தெரிவித்தனர்.