மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட 80 ஆயிரம் கன அடி நீர் திருச்சியை நோக்கி வந்து கொண்டிருப்பதால் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால், கரையோர பகுதி மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.