பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்றிரவு உயிரிழந்தார்.
குன்னம் அருகேயுள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி தமிழ்திலகம் (23). கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த தமிழ்திலகம் விஷம் குடித்தார். அரியலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிசிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை ஜெகதீசன் அளித்த புகாரின் பேரில், குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் வரதட்சினை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டாரா என சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி விசாரணை நடத்தி வருகிறார்.