தீவிரவாதத்தை எதிர்க்க ஆப்பிரிக்க நாடுகளுடனான ஒத்துழைப்பை இந்தியா வலிமைப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்பாய் படேலின் உருவசிலையை உகாண்டா அதிபர் யோவேரி மியூஸ்வேனி உடன் இணைந்து திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்த நிகழ்வு உயிர்துடிப்புடனும், உற்சாகம் அளிக்கும் விதத்திலும் இருப்பதாக கூறினார். உகாண்டாவின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் பெரும் பங்களிப்பதாகவும் அவர் பாராட்டினார்.