பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த டிச.12ம் தேதியன்று இந்தியா முழுவதும் “ தேசிய மக்கள் நீதிமன்றம்” நடவடிக்கையின் படி பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த காவல்துறை சம்பந்தபட்ட வழக்குகள், மீது உடனடி தீர்வு நடவழக்கை எடுக்கப்பட்டதில், பெரம்பலூர் மாவட்டத்தில் நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட நடவழக்கையின் படி 464 இ.த.ச வழக்குகளின் மீதும், 422 மதுவிலக்கு அமலாக்க சட்டப்பிரிவு வழக்குகளின் மீதும், 1247 மோட்டார் வாகன சட்டப்பிரிவு வழக்குகள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டு, மொத்தம் 2133 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது என பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.