பெரம்பலூர்: 2015ல் அரசுத் தொழில் நுட்பத் (இசை,ஓவியம், தையல்) தேர்வுகள், தொடர் மழையின் காரணமாக 3.12.2015 முதல் 9.12.2015 வரையில் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.
அத்தேர்வுகள் மீண்டும் 22.12.2015 முதல் 31.12.2015 வரை (ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து) நடைபெற உள்ளது.
மேலும், ஒத்தி வைக்கப்பட்ட அரசுத் தொழில்நுட்பத் தேர்விற்கான கால அட்டவணை www.tndge.in , என்ற இணைய தளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்துக்கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.