பெரம்பலூர் அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார்.
பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மகள் தனலட்சுமி (17). இவர் அக்கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோரம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் தினந்தோறும் டிவி பார்த்து கொண்டிருந்தததால் கடந்த 15ம்தேதி தாய் விஜயா திட்டியால் மனமுடைந்த தனலட்சுமி விஷம் அருந்தினார்.
இதையறிந்த அவரது பெற்றோர் தனலட்சுமியை பெரம்பலூர் அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தனலட்சுமி இறந்தார்.
இதுகுறித்து சாம்பசிவம் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.