பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க கீழ் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமீன் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருப்பசாமி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சமூக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோருக்கு ஜாமீன் வழங்க கூடாது என உத்தரவிட்டது. மேலும், ஜூலை 16ஆம் தேதிக்குள் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் 2வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும்,செப்டம்பர் 24 ஆம் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க கீழ் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.