சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் 175-வது ஆண்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மருத்துவமனையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவையொட்டி குழந்தைகள் நல மருத்துவமனை முழுவதும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவை தொடங்கிவைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் மகப்பேறு மருத்துவ உதவி குறித்த உறுதி மொழியினை கூற அனைத்து மருத்துவர்களும் செவிலியர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து மருத்துவமனையில் அமைக்கப்பட்டு இருந்த பல்வேறு காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் மருத்துவமனையின் வரலாறு குறித்த குறும்படம் போட்டு காண்பிக்கப்பட்டது. பின்னர் இதே மருந்துவமனையில் பிறந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந. பாலகங்கா மருத்துவர் சாந்தா உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர் குழந்தைகள் நல மருத்துவமனையிலி சிகிச்சை பெற்ற உயிர் காப்பாற்றப்பட்ட நோயாளிகள் பலர் தங்களின் கருத்தகளை பதிவு செய்தனர்இந்த விழாவில் உரையாற்றிய மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மகப்பேறு மருத்துவமனை சாதனைகள் பல படைத்து இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து உரையாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசு குழந்தைகளின் நலனுக்காகவும் பெண்களின் நலனுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் , சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் 175-வது ஆண்டுவிழாவையொட்டி பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் , எந்த நேரத்தில் மருத்துவமனையை அனுகினாலும் மருத்துவ உதவிகள் செய்வதற்கு மருத்துவர்கள் செவிலியர் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.