முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையில் பார்வதி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பார்வதி மருத்துவமனையின் முழங்கால் அறுவை சிகிச்சை நிபுணரும்,ஆலோசகருமான மருத்துவர் எம்.கே. வெற்றிக்குமார் , தங்களிடம் தேவகி என்ற நோயாளி மூட்டு பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு வந்ததாகவும் அவருக்கு வழக்கமான மருத்துவ அறுவை சிக்கிச்சையை விட பகுதியளவு முழங்கால் அறுவை சிகிச்சை பலன் அளிக்கும் என்பதை கருத்துல் கொண்டு இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார். இந்தசிகிச்சையில் பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டுமே அறுவை சிகிச்சை நடைபெறுவதால் நோயாளிகள் எளிதில் குணமடையமுடியும் என்றும் கூறினார்.மேலும் நோயாளியை கடுமையான ஆய்வு செய்து அவரது எதிர்காலங்களை கருத்தில் கொண்டு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதாகவும் மருத்துவர் வெற்றிக்குமார் தெரிவித்தார். சிகிச்சை பெற்ற யோயாளி தேவகி , தாம் கடுமையான மூட்டு வலியில் அவதிப்பட்டு வந்ததாகவும் இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளானதாகவும் கூறினார். தமக்கு அளிக்கப்பட்ட புதிய சிகிச்சைக்கு பின்னர் வேகமாக நடக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் கூறினார்.இந்த புதிய மூட்டு அறுவை சிகிச்சை முதன்முறையாக சென்னை பார்வதி மருத்துவமனையால் சாதிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.