ரெப்கோ வங்கி இயக்குனர் இசபெல்லா மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தாயகம் திரும்பியோர் அனைத்து இந்திய நலச்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் அந்த அமைப்பின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆரப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் சு.ஜீவன் தலைமை தாங்கினார். பி.தனபால், ஏ.ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோர முன்னிலை வகித்தனர்.திமுக தலைமை நிலை செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கு.க. செல்வம்,திராவிடர் விடுதலை கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன்,முன்னாள் மேயர்,மா.சுப்பிரமணியம், தாயகம் திரும்பியோர் மூத்த தலைவர் குருமூர்த்தி, பத்திரிகையாளர் ஜேம்ஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆரப்பாட்டத்தில் உரையாற்றிய சு.ஜீவன்,ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமானரெப்கோ ஹோம் பைனான்ஸ்நிறுவனத்தை ரெப்கோ வங்கியுடன இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும்ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குனர் பொறுப்பு வகிக்கும் திருமதி இசபெல்லாமுறைகேடுகளிலும் அதிகார துஷ்பிரயோகங்களிலும் ஈடுபடுவதாக புகார்கள் குவிந்துவருவதால் அவர மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைஐ விடுத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.