வீட்டு வேலை தொழிலாளர்களின் தேசிய மடை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆக்ஸ்ட் மாத்ம் 2-ந்தேதி டெல்லியில் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் உறுப்பினர் கீதா மற்றும் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிளாரா ஆகியோர் இதனை தெரிவித்தனர்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் , மத்திய அரசு பல்வேறு தொழிற்சங்க சட்டங்களை மாற்றி அமைக்க திட்டமிட்டு இருப்பதை வன்மையாக கண்டித்தனர். இந்த சடத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் மாதம் 2-ந்தேதி தலைநகர் டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்த இருப்பதாகவும் அதில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொள்கின்றனர் என்றும் கூறினார்.தொழிலாளர்கள் சட்ட சீர் திருத்தம் என்பது வரவேற்கத்தக்கது.என்றும் வணிகத்தை சுலபமாக செய்தல் என்ற நோக்கத்துடன் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட இருப்பது தொழிலாளர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார. முக்கியமாக தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான அம்சங்கள் அனைத்தும் இனி இருக்க வாயப்பில்லை என்றும் முதலாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துமு விதமாகத்தான் இந்த சட்டங்கள் இருக்கும் என்றும் தெரிவித்தார். ஆகவே இந்த புதிய சட்டங்களை கொண்டு வருவதை மறு உபரிசீலனை செய்து , புதிய சட்டதிருத்தங்களை உடனியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில ஆகஸ்ட் 2-ந்தேதி பேரணி நடைபெறுவதாகவும முன்னதாக கட்டிட தொழிலாளர்கள் ஆகஸ்ட் 1-ந்தேதி டெல்லியில் பேரணி நடத்த இருப்பதாகவும் கீதா தெரிவித்தார். இந்தநிகழ்வின் போது அமைப்பின் நிர்வாகிகள் எஸ்தர் ,வளர்மதி, ராஜசேகர் ஆகியோரும் உடன் இருந்தனர்.