29-10 sp
பெரம்பலூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக அரசு ஆதிதிராவிடர் நல மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள் 28.10.2015 அன்று பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 10 அரசுஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த, 350 மாணவர்கள், 250 மாணவிகளும் என மொத்தம் 600 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

14-வயதுக்குட்பட்டடோர் 17- வயதுக்குட்பட்டடோர், 19-வயதுக்குட்பட்டடோர் ஆகிய மூன்று பிரிவுகளில் வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது துவக்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றது. மாணவர்களுக்கான 14-வயதுக்குட்பட்டடோருக்கான தடகளப்போட்டிகளில் 100 மீ ஓட்டப்போட்டியில் ஒகளூர் பள்ளி மாணவன் .ராமநாதன்முதலிடத்தையும்,

200 மீ ஓட்டப்போட்டியில் ஈச்சம்பட்டி பள்ளி மாணவன் எம்.சின்னராசு முதலிடத்தையும், 400 மீ ஓட்டப்போட்டியில் பாடாலூர் பள்ளி மாணவன் கே.சக்திவேல் முதலிடத்தையும்,

ஈட்டி எறிதல் போட்டியில் பாடாலூர் பள்ளி மாணவன் த.தனுஷ் முதலிடத்தையும், வட்டு எறிதல் போட்டியில் ஈச்சம்பட்டி பள்ளி மாணவன் வி.முத்துசாமி முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் பொம்மனப்பாடி பள்ளி மாணவன் வி.நவநீதன் முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் ஆலம்பாடி பள்ளி மாணவன் எஸ்.நிஷாந்த் முதலிடத்தையும், உயரம் தாண்டுதல் போட்டியில் பாடாலூர் பள்ளி மாணவன் பி.சாந்தகுமார் முதலிடத்தையும் பெற்றனர்.

17-வயதுக்குட்பட்டடோருக்கான பிரிவில் 100மீ ஓட்டப்போட்டியில் என்.சிவகுமார்-ஆலம்பாடி பள்ளி மாணவன் முதலிடத்தையும், 200மீ ஓட்டப்போட்டியில் ஆலம்பாடி பள்ளி மாணவன் எஸ்.மோகன்ராஜ் முதலிடத்தையும், 400மீ ஓட்டப்போட்டியில் நத்தக்காடு பள்ளி மாணவன் டி.பிரவீன் முதலிடத்தையும், உயரம்தாண்டுதல் போட்டியில் பாடாலூர் பள்ளி மாணவன் எஸ்.சதிஷ்குமார் முதலிடத்தையும்,

குண்டு எறிதல் போட்டியில் நத்தக்காடு பள்ளி மாணவன் எஸ்.விக்கி முதலிடத்தையும், ஈட்டி எறிதல் போட்டியில் நத்தக்காடு பள்ளி மாணவன் ஆர்.கவியரசன் முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் ஆலம்பாடி பள்ளி மாணவன் என்.செல்வகுமார் முதலிடத்தையும் பெற்றனர்.

19-வயதுக்குட்பட்டடோருக்கான பிரிவில் 100மீ ஓட்டப்பிரிவில் களரம்பட்டி பள்ளி மாணவன் பி.மோகன்ராஜ் முதலிடத்தையும், 200மீ ஓட்டப்பிரிவில் களரம்பட்டி பள்ளி மாணவன் ஜி.அபிலாஷ் முதலிடத்தையும்,

400மீ ஓட்டப்பிரிவில் களரம்பட்டி பள்ளி மாணவன் ஜெ.மூவேந்திரன் முதலிடத்தையும், ஈட்டி எறிதல் போட்டியில் களரம்பட்டி பள்ளி மாணவன் எம்.சிவா முதலிடத்தையும், வட்டு எறிதல் போட்டியில் களரம்பட்டி பள்ளி மாணவன் கே.அருண்ராஜ் முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் களரம்பட்டி பள்ளி மாணவன் என்.ஹரிஹரன் முதலிடத்தையும், உயரம் தாண்டுதல் போட்டியில் களரம்பட்டி பள்ளி மாணவன் எஸ்.அஜித்குமார் முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் களரம்பட்டி பள்ளி மாணவன் கே.அருண்ராஜ் முதலிடத்தையும் பெற்றனர்.

மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளில் 14 வயதுக்குட்பட்டடோருக்கான பிரிவில் 100மீ ஓட்டப்போட்டியில் ஈச்சம்பட்டி பள்ளி மாணவி கே.காயத்ரி முதலிடத்தையும், 200மீ ஓட்டப்போட்டியில் நத்தக்காடு பள்ளி மாணவி எஸ்.சுமித்ரா முதலிடத்தையும்,

400மீ ஓட்டப்போட்டியில் நத்தக்காடு பள்ளி மாணவி எஸ்.தனலட்சுமி- முதலிடத்தையும், வட்டு எறிதல் போட்டியில் களரம்பட்டி பள்ளி மாணவி ம.கௌசிகா முதலிடத்தையும், ஈட்டி எறிதல் போட்டியில் ஆலம்பாடி பள்ளி மாணவி அ.வசந்தா முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் ஈச்சம்பட்டி பள்ளி மாணவி எம்.ஜோதி முதலிடத்தையும், உயரம் தாண்டுதல் போட்டியில் பசும்பலூர் ஆர்.சத்யா பள்ளி மாணவி முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் ஆலம்பாடி பள்ளி மாணவி பி.கிருபா முதலிடத்தையும் பெற்றனர்.

17 வயதுக்குட்பட்டடோருக்கான பிரிவில் – ஈட்டி எறிதல் போட்டியில் ரா.ரம்யா-ஈச்சம்பட்டி பள்ளி மாணவி முதலிடத்தையும், என்.சுகன்யா-ஆலம்பாடி பள்ளி மாணவி முதலிடத்தையும், 200மீ ஓட்டப்போட்டியில் ஒகளூர் பள்ளி மாணவி எஸ்.சத்யா முதலிடத்தையும்,

400மீ ஓட்டப்போட்டியில் ஆலம்பாடி பள்ளி மாணவி என்.கோகிலா முதலிடத்தையும், உயரம் தாண்டுதல் போட்டியில் களரம்பட்டி பள்ளி மாணவி என்.வெண்ணிலா முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் பாடாலூர் பள்ளி மாணவி அ.செண்பகம் முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் ஒகளூர் பள்ளி மாணவி பி.சுஜாதா முதலிடத்தையும் பெற்றனர்.

19-வயதுக்குட்பட்டடோருக்கான பிரிவில்- 100மீ ஓட்டப்பிரிவில் என்.புஷ்பலதா- முதலிடத்தையும், 200 மீ ஓட்டப்பிரிவில் டி.வைஷ்ணவி முதலிடத்தையும், 400 மீ ஓட்டப்பிரிவில் ஆர்.பிரீத்தா முதலிடத்தையும், உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்.மாதவி முதலிடத்தையும், வட்டு எறிதல் போட்டியில் வி.தேவிகா முதலிடத்தையும், ஈட்டிஎறிதல் போட்டியில் எம்.நிஷாந்தினி முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் ஆர்.மாலதி முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் ஆர்.மாதவி முதலிடத்தையும் பெற்றனர். இந்த மாணவிகள் அனைவரும் களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கான குழுப்போட்டியில் 14 வயதுக்குட்பட்டடோருக்கான பிரிவில் டென்னிகாய்ட் போட்டியில் ஒற்றையர் போட்டியில் பாடாலூர் பள்ளியும், இரட்டையர் போட்டியில் ஆலம்பாடி பள்ளியும் முதலிடத்தை பெற்றது. கால்பந்து போட்டியில் ஈச்சம்பட்டி பள்ளி முதலிடத்தையும், கோ-கோ போட்டியில் களரம்பட்டி பள்ளி முதலிடத்தையும், இறகுப்பந்து ஒற்றையா; மற்றும் இரட்டையர் போட்டியில் களரம்பட்டி பள்ளி முதலிடத்தையும் பெற்றனர்.

17 வயதுக்குட்பட்டடோருக்கான பிரிவில் கோ-கோ போட்டியில் லாடபுரம் பள்ளி முதலிடத்தையும், கால்பந்து போட்டியில் ஆலம்பாடி பள்ளி முதலிடத்தையும், கபாடி போட்டியில் ஒகளூர் பள்ளி முதலிடத்தையும், இறகுப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் களரம்பட்டி முதலிடத்தையும் பெற்றனர்.

19 வயதுக்குட்பட்டடோருக்கான பிரிவில் கபாடி, வாலிபால், கால்பந்து போட்டிகளில் களரம்பட்டி முதலிடத்தையும் பெற்றனர்.

மாணவிகளுக்கான குழுப்போட்டியில் 14 வயதுக்குட்பட்டடோருக்கான பிரிவில் எறிபந்து போட்டியில் பாடாலூர் பள்ளி முதலிடத்தையும்,

டென்னிகாய்ட் போட்டியில் ஒற்றையர் போட்டியில் பாடாலூர் பள்ளியும், இரட்டையர் போட்டியில் ஈச்சம்பட்டி பள்ளியும் முதலிடத்தை பெற்றனர். கோ-கோ , வாலிபால் போட்டிகளில் களரம்பட்டி பள்ளி முதலிடத்தையும், கால்பந்து போட்டியில் ஆலம்பாடி பள்ளி முதலிடத்தையும், இறகுப்பந்து இரட்டையர் போட்டியில் களரம்பட்டி பள்ளி முதலிடத்தையும் பெற்றனர்.

17 வயதுக்குட்பட்டடோருக்கான பிரிவில் எறிபந்து போட்டியில் பாடாலூர் பள்ளி முதலிடத்தையும், கால்பந்து மற்றும் டென்னிகாய்ட் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் ஆலம்பாடி பள்ளி முதலிடத்தையும், கோ-கோ போட்டியில் ஒகளூர் பள்ளி முதலிடத்தையும், கபாடி போட்டியில் லாடபுரம் பள்ளி முதலிடத்தையும், இறகுப்பந்து இரட்டையர் போட்டியில் களரம்பட்டி பள்ளி முதலிடத்தையும் பெற்றனர்.

19 வயதுக்குட்பட்டடோருக்கான பிரிவில் டென்னிகாய்ட் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டி, கோ-கோ, கபாடி, வாலிபால் எறிபந்து, கால்பந்து போட்டிகளில் களரம்பட்டி பள்ளி முதலிடத்தையும் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தடகளப் பயிற்றுநர் க.கோகிலா, கைப்பந்து பயிற்றுநர் தே.சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!