Perambalur: The ‘Dravidian Model 2.0’ is a government that ensures benefits reach people and families from all walks of life—Former MLA Rajkumar speaks while canvassing for votes for DMK candidate Jayalakshmi.

பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பளாராக போட்டியிடும் ஜெயலட்சுமி மதசார்பற்ற கூட்டணி கட்சியினருடன் பெரம்பலூர் ஒன்றியத்தில் திமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ம.ராஜ்குமார் தலைமையில், எளம்பலூர் முன்னாள் ஊராட்சி தலைவர் கே.சி.ஆர். குமார் ஏற்பாட்டில் இன்று காலை எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், காந்தி நகர், சமத்துவபுரம் பகுதிகளில் திமுக வேட்பாளர் ஜெயலட்சுமி வாக்குகளை சேகரித்தார்.

பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எளம்பலூர் பெரியர் நினைவு சமத்துவபுரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் பேசியதாவது: பெரியார் சமத்துவபுரத்தை வழங்கியது கலைஞர் தலைமையிலான அரசு, உங்களுக்கு கட்டி கொடுத்ததுடன், பழுது பார்க்கவும் செய்து கொடுத்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு என்பதை நீங்கள் அறிவீர்கள்.

“நன்மதிப்பை உங்களுக்கு இதெல்லாம் செஞ்சது திராவிட முன்னேற்றக் கழக அரசு. அதான் நாங்க சொல்லுவோம் நாங்க சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்லுவோம்னு. உண்மைப்படியே உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருந்தா ஒரு வீட்டில கூட இரட்டை இலை இருக்கக்கூடாது. மனசாட்சிக்கு இருந்தா ஒரு வீட்டில கூட இரட்டை இலைக்கு வாக்களிக்க கூடாது. அஞ்சரை சென்ட் இடம் இன்னைக்கு பெரம்பலூர் பக்கத்துல கார்ப்பரேஷன் ஆகப் போகுது. உங்களுடைய வீட்டின் மதிப்பை பாருங்க. ஜாதி மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏழைகளுக்கும் விவசாயிகள் வணிகர்கள் அப்படின்னு என்ன ஜாதியா இருந்தாலும் எந்த தரப்பு மக்களா இருந்தாலும் எல்லாத்துக்கும் இடம் கொடுத்திருக்காரு. தொடர்ந்து இந்த திட்டங்கள் பயன்பட வேண்டுமானால் நீங்கள் இப்பொழுது வருகின்ற சட்டமன்றத் தேர்தல்ல 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்ல உதயசூரியன் சின்னத்திற்கு டாக்டர் ஜெயலட்சுமி அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டுகிறோம். அவர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினராக ஆகி, டாக்டர் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் தமிழகத்தின் முதல்வராக ஆன உடனே தான் இந்த திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து உங்களுக்கு கிடைக்கும்.

இன்னைக்கு பெண்களுக்கான எல்லா திட்டங்களை நாங்க தொடர்ந்து கொடுத்துக்கிட்டு இருக்கிறோம். பெண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கு நாங்க பஸ் கொடுக்கிறோம். உதவித்தொகை கொடுக்கிறோம் உரிமைத்தொகை கொடுக்கிறோம் என்பதையெல்லாம் தாண்டி படிக்கிற காலேஜ்ல படிக்கிற பிள்ளைங்க கூட கொடுத்துக்கிட்டு இருக்கிறோம். மாணவர்களுக்கு கொடுக்கிறோம், விவசாயிகளுக்கு கொடுக்கிறோம், வணிகர்களுக்கு கொடுக்கிறோம். இந்த சமுதாயத்துல அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த அரசின் மூலம் திராவிட மாடல் அரசு 2.0 இந்த ஆட்சியில எந்த ஒரு குடும்பத்திலேயும் ஏதாவது ஒரு திட்டத்தில் நீங்கள் பயனடைந்து இருப்பீர்கள். அந்த நன்றியுணர்வோடு வருகின்ற தேர்தல்ல 23ஆம் தேதி நடக்கிற சட்டமன்றத் தேர்தல்ல உங்களுடைய வாக்குகள் அனைத்தையும் உதயசூரியன் சின்னத்திற்கு வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என பேசினார்.

பின்னர், திமுக வேட்பாளர் ஜெயலட்சுமி பேசியதாவது: மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர், மாண்புமிகு தமிழகத்தின் துணை முதலமைச்சர், நம் மண்ணின் மைந்தர் அண்ணன் ஆ. ராசா அவர்களின் ஆதரவோடும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து தலைவர்களின் ஆசியோடும், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனக்கு, உங்களின் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு உங்களின் பொற்பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.”

“உங்களின் கோரிக்கைகளையும் உங்களுக்கான திட்டங்களையும் உடனுக்குடன் நிறைவேற்ற பாடுபடுவேன் என்றும்,” திராவிட மாடல் 2.0 ஆட்சி மலர்ந்திட, நம் கழகத் தலைவர், சமூக நீதி காவலர் மீண்டும் முதலமைச்சராக அரியணை ஏறிட, நம் மண்ணின் மைந்தர் அண்ணன் ஆ. ராசாவின் புகழ் ஓங்கிட வாக்களிப்பீர் உதயசூரியன்! நமது சின்னம் உதயசூரியன்! வெற்றிச் சின்னம் உதயசூரியன்! வாக்களிப்பீர் உதயசூரியன்! நன்றி, வணக்கம்.” என்றும் முன்னதாக,

2026 -ல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால், கலைஞர் மகளிர் உரிமை தொகை இனி மாதம் ரூ.2000/- வழங்கப்படும். மகளிருக்கு ரூ.8000/- மதிப்பிலான இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும். அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டம் ரூ.10 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சோர்ந்த அரசு ஊழியருக்கு புதிய பென்சன் திட்டம் செயல்படுத்தப்படும். நெல் மற்றும் கரும்பு குவிண்டால் & டன் ஒன்றுக்கு கொள்முதல் விலை ரூ.3500/- & ரூ.4500/- ஆக உயர்த்தப்படும். முதியோர், கைம்பெண் மற்றும் 50+ வயதுத் திருமணமாகாத மகளிருக்கு ஓய்யூதியம் ரூ.2,000 ஆக வழங்கப்படும். மாற்றுதிறனாளிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு. கலைஞரின் கனவு இல்லம், பல்வேறு திட்டங்களின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத விலையில்லா புதிய நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும். 35 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும்.
5 ஆண்டுகளில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மாவட்டந்தோறும் குறைந்தபட்சம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி. சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்கும் பெண்களுக்கு பிணை ஏதுவுமின்றி ரூ.5 இலட்சம் வரை மானியத்துடன் வங்கி கடனுதவி வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து வாக்குகளை சேகரித்தனர்.

மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் செ.அண்ணாதுரை, தேதிமுக மாவட்ட செயலாளர்கள் பெரம்பலூர் துரை. சிவஐயப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் பெரம்பலூர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் பெரம்பலூர் வெ.ஜெயராமன், எளம்பலூர் முன்னாள் ஊராட்சி தலைவர் கே.சி.ஆர். குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவிஜெயபால், விசிக மாவட்ட செயலாளர்கள் பெரம்பலூர் ந.கிருஷ்ணகுமார், நகராட்சி கவுன்சிலர்கள் ஜெயப்பிரியா, தங்க.சண்முகசுந்தரம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லாடபுரம் ராஜுவ்காந்தி உள்பட மதசார்பற்ற கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாநில, மாவட்டம், ஒன்றிய, பேரூர், கிளை பொறுப்பாளர் திரளாக கலந்து கொண்டனர்.

செங்குணம், அருமடல், பாலாம்பாடி, எளம்பலூர் இந்திரா நகர், எம்.ஜி.ஆர் நகர், காந்தி நகர், சமத்துவபுரம், கோனேரிபாளையம், ஆலம்பாடி, திருப்பெயர், சொக்கநாதபுரம், செஞ்சேரி, களரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வேட்பாளர் ஜெயலட்சுமி இன்று காலை முதல் தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு கிராமங்கள் தோறும் வேட்டுகள், பட்டாசுகள் முழங்க வரவேற்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர்.

எளம்பலூர் – சமத்துவபுரம்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!