Kunnam: “We have been sitting up in the dark, sleepless, telling ourselves, ‘Dawn is breaking soon… dawn is breaking soon!'” — Actress Kasthuri, while campaigning for candidate Saranya and seeking votes for the ‘Two Leaves’ symbol.

தமிழ் திரைப்பட நடிகையும், பாஜக கலைப்பிரிவு மாநில பொறுப்பாளருமான கஸ்தூரி, குன்னம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் சரண்யாவை ஆதரித்து, வேப்பூர் பஸ் ஸ்டாண்டில் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

“தமிழ்நாட்டுக்கும் என் தாய் தமிழுக்கும் வணக்கம் செலுத்திக்கொண்டு, இங்கு அலைகடலென திரண்டு வந்திருக்கும் பெரியோர்களுக்கும், தாய்மார்களுக்கும், அதைவிட மிக ஆரவாரமாக இங்கே ஆரவாரம் செய்துகொண்டிருக்கும் இளைஞர் கூட்டத்திற்கும்… IJK வெற்றி வேட்பாளர் சரண்யா அனபழகன் அவர்களை வெற்றிக்கு கட்டியம் சொல்வது போல் இங்கு கடலென திரண்டு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு வணக்கங்கள்.

உண்மையா சொல்றேன்… குன்னம் அப்படிங்கறத பத்தி இந்த நிகழ்ச்சி வரைக்கும் நான் வேற என்னமோ யோசிச்சிருந்தேன். ஆனா இன்னைக்கு தான் தெரியுது, குன்னம் இப்ப இருக்கிற எம்.எல்.ஏ (MLA) அடியில இல்ல, ஆனா இனி வரப்போகும் எம்.எல்.ஏ-வுடன் இனி இருக்கப்போகும் குன்னம்… அது வேற வேற வேற!

அம்மா புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களுடைய வழிநடக்கும் அண்ணன் எடப்பாடியார் உடைய ஆட்சிக்கு எப்பவுமே தாய்மார்கள் ஆதரவா தான் இருப்பாங்க. அதனால இங்க தாய்மார்கள் வந்து திரண்டு இருக்கிறது எனக்கு ஆச்சரியமா இல்ல.

எந்த ஒரு தீய சக்தியா இருந்தாலும், அந்த தீய ஆட்சி அகல வேண்டும் என்று ஆண்கள் நினைப்பார்கள். துஷ்ட சக்திகளுக்கு எதிராக திரண்டு வருவார்கள். அதனால இங்க பெரியோர்கள் மற்றும் பொறுப்பான குடும்பஸ்தர்கள் இங்க திரண்டு வந்திருக்கிறது எனக்கு ஆச்சரியமா இல்ல.

ஆனா ஒரு இளைய தலைமுறை வேட்பாளரை ஆதரித்து, அந்த இளையவரின் பார்வையும் தொலைநோக்கு பார்வையும் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதற்கு ஆதாரமாக, இங்கு வந்து குழுமி இருக்கும் இளைஞர் பட்டாளத்தை பார்க்கும் பொழுது எனக்கு மிகப்பெரிய பெருமையாக இருக்கிறது.

This is the power of ‘Rettai Ilai’ (இரட்டை இலை), this is the power of youth! எல்லா இடத்திலயும் இளைஞர்கள் வேற ஒருத்தர் பின்னாடி இருக்கிறதா நினைச்சிகிட்டு இருக்காங்க. அவங்க எல்லாரையும் வந்து இங்க குன்னத்துல பார்க்க சொல்லுங்க… எல்லா இளைஞர்களும் இங்க சரண்யா அனபழகன் பின்னாடி இருக்காங்க.

சிஸ்டர்… சரண்யாவை பார்க்கும் பொழுது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. ஏன்னு கேட்டா தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரைக்கும் பிரதமர் மோடி உடைய கனவுகளை நனவாக்கும் ஒரே ஒன்றுபட்ட செயல் வீரர் அணியாகத்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வருகிறது. அதுல பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதிலும், முன்னுரிமை கொடுப்பதிலும் மோடிக்கு நிகர் மோடி மட்டுமே!”

இன்றைய தமிழக அரசியல் சூழலில், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பான உரையாடலின் தமிழ் வடிவம் இதோ:

பாஜக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, பெண்களுக்கு ஆட்சியில் மூன்றில் ஒரு பங்கு அதிகாரத்தை உறுதி செய்கிறது. இது தமிழகப் பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பெருமையை தேடித்தரும் புரட்சிகரமான முடிவு எனப் பார்க்கப்படுகிறது.

இந்த மசோதாவைத் தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் எதிர்க்கின்றன: திமுக, காங்கிரஸ், மற்றும் விசிக போன்ற கட்சிகள் அடங்கிய கூட்டணி இதற்குத் தடையாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

இவர்கள் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்ற காரணத்தைக் கூறி, பெண்களுக்கான அதிகாரத்தைத் தள்ளிப்போட முயல்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. எந்தப் பின்னணியும் இல்லாத சாமானியப் பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதைக் கண்டு இந்தக் கட்சிகள் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் குறித்துப் பின்வரும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன: தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஒரு தலைவராக எடப்பாடி கே. பழனிசாமி (EPS) அவர்கள் பார்க்கப்படுகிறார். அவர் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தின் தொகுதிகள் குறையாமல் இருப்பதை உறுதி செய்வார்.

உண்மையான தமிழர்கள் யாரும் தமிழகத்தின் உரிமைகளை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். “எந்தப் பின்னணியும் இல்லாத எத்தனையோ பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் இந்த மசோதா, ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான தொடக்கம்.”

“…நயினார் நாகேந்திரன், அதிலிருக்கக்கூடிய தலைவர்கள் அண்ணாமலை ஜி-யாக இருக்கட்டும், வானதி ஜி-யாக இருக்கட்டும், ராஜா அவர்களாக இருக்கட்டும் இன்னும் எத்தனையோ தலைவர்கள்.

தமிழிசை – அவங்க பேர்லயே தமிழ் இருக்கு. யார் பேர்லயாவது இருக்கா? திமுக தலைவர்கள் பேர்ல இருக்கு, அங்கொன்னும் இங்கொன்னுமா இருக்கு. ஆனா அவங்களே வீட்டுல தமிழ் பேசுவாங்களாங்கிறது டவுட்டு. ‘தமிழ்’னு பேர் வைச்சுக்கிட்ட திமுக தலைவர்கள் வீட்டுல என்ன பேசுறாங்கங்கிறது அங்க போய் பார்த்தாதான் தெரியும். எந்த மொழியும் நாம குறைச்சுச் சொல்லல, அந்த இரட்டை வேடத்தை குறிப்பிட்டுச் சொல்றோம்.

தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் எங்க பாஜக தலைவர் விட்டுக் கொடுத்துருவாங்களா? தமிழ்நாட்டுல அரசியல் செய்துகொண்டிருக்கிற இவரோ, இல்லை எங்க தலைவர்களோ விட்டுக்கொடுத்துருவாங்களா? புரட்சித் தமிழன் தமிழ்நாட்டுடைய உரிமையைக் காக்குறதுக்காக நல்லாட்சி செய்தவர், விட்டுக்கொடுத்துருவாரா?

நான் கேட்கிறேன், இவ்வளவு ஆஹா… ‘தமிழ்நாட்டுக்கு அச்சுறுத்தல், நாங்க வந்து அதை எந்நேைக்கும் விடமாட்டோம், தமிழ்நாட்டுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் நாங்க அதைத் தாங்கிக்கவே மாட்டோம்’ ஆஹா.. அப்படின்னு நீலிக்கண்ணீர் வடிக்கிறாங்களே, அவங்களைப் பார்த்து நான் கேட்கிறேன். அஞ்சு வருஷம் நீங்கதானே ஆட்சியில இருந்தீங்க? தமிழ்நாட்டுக்கு என்னய்யா நல்லது பண்ணீங்க?

தமிழ்நாட்டு உரிமைகளை, நீங்கதான் 40-க்கு 40 பாராளுமன்றத்துல இருக்கீங்களே, தமிழ்நாட்டு உரிமையை எதை நீங்க கேட்டீங்க? ஒரு தீபம் ஏத்தணும்னு சொல்லிட்டாரு ஒரு ஜட்ஜ். அந்த தீபத்தை ஏத்தக்கூடாது, அங்க இருக்கக்கூடிய பக்தர்கள் எல்லாம் யாரு? தமிழர்கள் தானே? அந்த பக்தர்கள் இந்துவா இருந்த ஒரே காரணத்துக்காக அந்த தீபத்தை ஏத்தக்கூடாது, முருக பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் இருக்கக்கூடியவர்கள் தீபத்தை ஏத்தக்கூடாதுன்னு அந்த நீதிபதியே தூக்கணும்னு சொல்லி ஆபாச வார்த்தைகளையும் அவதூறுகளையும் அவர் மேல அள்ளித் தெளிச்சு பாராளுமன்றத்துல ஓடிப்போய் ‘கெராவ்’ (Gherao) செஞ்சீங்களே சபாநாயகரை!

தமிழ்நாட்டுக்கு உண்மையான பிரச்சனைகள் வந்தப்போதெல்லாம் அப்போல்லாம் எங்கேயா போனீங்க நீங்க? எங்க போனீங்க? உங்களுக்கு நாலு எம்பி கம்யூனிஸ்ட் இருக்கான், எங்கே? கேரளால போய் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில பேசுங்க பார்க்கலாம். பேசுனீங்களா? ஒன்பது எம்பி காங்கிரஸ்ல இருக்காங்க, அண்டை மாநிலத்துல கர்நாடகால காங்கிரஸ் தான் ஆட்சி நடத்திட்டு இருக்கு. எங்கே மேகதாது அணைக்கு எதிரா நீங்க அங்க போய் பேசுனீங்களா? தமிழ்நாட்டுடைய உரிமையை நீங்க காப்பாத்துற லட்சணம் இதானே?

எடப்பாடியாரோட ஆட்சி ‘கப்சிப்’ அப்படின்னு நக்கல் பண்றாரு அப்பா ஸ்டாலின் அவர்கள். ஏன்டா… வள்ளுவருக்குக் காவி போட்டாலும் கப்சிப், எம்ஜிஆருக்குக் காவி போட்டாலும் கப்சிப். என்ன பேசுறீங்க நீங்க? வள்ளுவர் காவிதான் போட்டிருந்தார். காவி போட்ட அவருக்குப் பேரே ‘பொய்யாமொழிப் புலவர்’. அறம், பொருள், இன்பம் என்று சனாதன தர்மத்தின் மூன்று கொள்கைகளை மூன்று அதிகாரங்களாக எழுதிய மிகப்பெரிய…” சனாதனவாதி திருவள்ளுவர்

காவி போட்டிருந்ததை மாத்தி, அவருக்கு வெள்ளை கலர் உடை போட்டதுதானே நீங்க? கலரை மாத்துன பச்சோந்தி நீங்க! உங்களுக்கு என்ன தகுதி இருக்கு எடப்பாடியாரை பேசுறதுக்கு?” “எம்.ஜி.ஆர் காவி போட்டாலும் கப்சிப்! எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு பக்தர். உங்களை மாதிரி கோயில் பணத்துல உங்க தொகுதிக்கு டைவர்ட் பண்ணி அங்க வந்து கல்லூரி கட்டுறவங்க கிடையாது.”

“எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய சொந்த பணத்தை எடுத்து பல தர்ம காரியங்களையும் பல ஆன்மீக காரியங்கள், கோயில் பணிகளை செய்தவர்கள்.” “புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் கோயில்களை பாதுகாத்த ஒரு தங்கத் தாரகையாக இன்று வரை அறியப்படுகிறார்.”

“ஆயிரம் கோயிலுக்கு கும்பாபிஷேகம் பண்ணேன்னு பெருமை மட்டும் பீத்திக்க தெரியுது. யார் பணத்துல பண்ணீங்க? அரசு நிதியிலிருந்து பண்ணீங்களா? பக்தர்கள் காணிக்கையிலிருந்து கலெக்ஷன் பண்ணித்தானே பண்ணீங்க?” “ஸ்பான்சர்ஸ் பிடிச்சு அதுல கமிஷன் எடுத்துதானே பண்ணீங்க? கும்பாபிஷேக கணக்குல கரப்ஷன் பண்ணித்தானே பண்ணீங்க?”

“உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கிடையாது; ஒன்லி கரப்ஷன் (Corruption), கமிஷன் (Commission), கலெக்ஷன் (Collection).” “அதெல்லாம் கிடைக்கலன்னா, அதெல்லாம் கிடைக்காத கோயிலுக்கு பக்கத்துல கூட நீங்க போகமாட்டீங்க. ஒன்லி துர்கா மேடம் மட்டும்தான் அந்த கோயிலுக்கெல்லாம் போவாங்க, நீங்க எல்லாம் போகமாட்டீங்க.”

“உங்களுக்கு தேவை கோயிலோ, கோபுரமோ, கும்பாபிஷேகமோ கிடையாது. அங்க இருக்கக்கூடிய உண்டியல் கலெக்ஷன் மட்டும்தான்.” “இப்படிப்பட்ட நீங்க கப்சிப் அரசுன்னு பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?” “விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு கப்சிப்னு இருக்கிறது எந்த அரசு? திமுக அரசு!”

“தமிழ்ப் புத்தாண்டுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்னு சொல்லக்கூட மனசு வராம, ரெண்டு நாள் முன்னாடி கப்சிப்னு இருந்த அரசு யார் அரசு? திமுக அரசு!”

“பெரிய செட், பெரிய நாயகம் என்று பெரிய பெயரில் மிகச் சின்ன ஈனத்தனமான செயல்களை செய்தபோது அதை தட்டிக்கேட்காமல் கப்சிப்னு இருந்த அரசு எந்த அரசு?” “தெய்வச் செயல் என்ற பெயரில் அரக்கர்கள் கூட செய்யத் தயங்கும் செயல்களைச் செய்த போது அங்கே சும்மா இருந்து கப்சிப் என்று இருந்த அரசு எந்த அரசு?”

“அண்ணா பல்கலைக்கழகத்தில யார் அந்த சார்-ன்னு நாங்க கேட்டு கேட்டு கேட்டு ஓய்ஞ்சே போயிட்டோம். அதுக்கு இன்னைக்கு வரைக்கும் பதில் சொல்லாம கப்சிப்னு முன்னாடியும் பின்னாடியும் மூடிக்கிட்டு இருக்கிற அரசு யாருடைய அரசு?” உங்களுடைய களவாணித்தனங்களை எல்லாம் யார் எந்த கேள்வி கேட்டாலும் பதிலே சொல்லாமல் கடந்து போகும் அரசு.”

“அதுல ரொம்ப ரொம்ப கனிமொழி அக்கா, அவங்க மேல நான் பெரிய மரியாதை கொடுத்திருக்கேன்.” “நான் ஒரு பெரிய மரியாதை வச்சிருக்கேன். ஆனா கனிமொழி அக்கா இன்டர்வியூ கொடுத்துப் பார்த்திருக்கீங்களா?”

“அவங்களை ஏதாவது வந்து கொஞ்சம் கேள்வி கேட்டுட்டா, காதிலே விழாத மாதிரி அப்படியே போயிடுவாங்க. கப் சிப்புனு போயிடுவாங்க.” “அந்தக் குடும்பத்துல யாரை யார் எந்த கேள்வி கேட்டாலும், அவங்களுக்குத் தேவைன்னா நக்கலா அவங்களா ஏதாவது சொல்லுவாங்க.”

“மக்கள் கேள்வி கேட்டா கப் சிப்புனு போயிடுவாங்க. வரவே மாட்டாங்க, அதுக்கப்புறம் தான கப் சிப்பு பத்தி பேசுறதுக்கு.” “இதுல இங்க குணத்துல ஒருத்தர் இருக்கிறார். மூணு தரம் MLA அதனால நாலாவது தரமும் இவரையே நீங்க வந்து MLA-வா ஜெயிக்க வைங்க அப்படின்னு மூணு நாலு முன்னாடி உதயநிதி சொன்னாரா?”

“எனக்கு புரியல மூணு தரம் MLA-வா இருக்குறது தான் தகுதியா? மக்கள் சேவை பண்ணாரு, 15 வருஷம் MLA-வா இருந்து இதெல்லாம் செஞ்சாரு அப்படின்னு நீங்க கேட்டா நியாயம்.” “மூணு தரம் ஜெயிச்சிட்டாரு நாலாவது தரம் ஜெயிக்க வைங்க. சிவசங்கர் அவர்கள் இன்னைக்கு எந்த துறைக்கு மந்திரியா இருக்கிறார் தெரியுமா? போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை.”

“போக்குவரத்துத் துறையில உதயநிதி அவர்கள் சொன்னாரு, டப்பா வண்டியெல்லாம் இருந்துச்சு இரட்டை இலை ஆட்சியில டப்பா வண்டி இருந்துச்சு.” “இப்ப நாங்க புது வண்டியெல்லாம் போடுறோம். அதனால எங்களுக்கு ஓட்டு போடுங்க போட்டுருங்க. அவர் வந்து நல்லா செயல்பட்டுருக்காரு.” “துணை முதலமைச்சர் அண்ணன் உதயநிதி அவர்களுக்கு நான் ஒன்னு சொல்றேன். மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?”

“இங்க டப்பா ஆட்சி நடக்குது. இந்த டப்பா ஆட்சியை அப்புறப்படுத்திட்டு புது ஆட்சியை போட்டீங்கன்னா நாங்க எல்லாம் இன்னும் நல்லா பாராட்டுவோம்னு சொல்றாங்க.” “உங்களுடைய டப்பா திட்டங்களும் ஸ்டிக்கர் ஒட்டின உங்க டப்பா திட்டங்களை தூக்கிட்டு உண்மையான மக்கள் நலத் திட்டங்களை எடப்பாடி ஐயா கையில எடுத்திருக்காரு.” “நீங்க நகந்துட்டு அந்த நல்ல புது ஆட்சியை எங்களுக்கு கொடுங்க. கனவு என்ன கனவு என்னனு கேக்குறீங்களே?”

“உங்கள் கனவு என்ன அப்படின்னு அப்பா ஸ்டாலின் கேக்குறாரு. ஐயா எங்க கனவு இரட்டை இலை மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும், இதான் கனவு.” “இங்க இருக்கக்கூடிய இத்தனை பேருடைய கனவும் அதான். சரியா?”

“விடியுது விடியுதுனு விடியல் ஆட்சினு சொன்னீங்க. நாங்களும் விடியப் போகுது விடியப் போகுதுனு இருட்டிலேயே தூங்காம உட்கார்ந்துருக்கோம்.” “ஐயா எங்களுக்கெல்லாம் நீங்க நகந்தீங்கன்னா நல்லபடியா ஒரு நல்ல நாள் மீண்டும் வரும் வெளிச்சம் வரும்.”

“அதுக்குப்பிறகு தான் இங்க நிம்மதியா எல்லாரும் ராத்திரில தூங்க முடியும். இதான் உண்மை. அடுத்த துறையைச் சொல்லவா? மின்சாரத் துறை.” “எந்த மின்சாரத் துறை? செந்தில் பாலாஜி அவர்கள் கையில இருந்த அந்த மின்சாரத் துறை. நானாவது செந்தில் பாலாஜினு பேர் சொல்றேன். இன்னைக்கு கோவையில…”

“…அதான் உண்மை அதான் உண்மைன்னு அங்கிருந்து நிறைய குரல் கேட்குது. குடிமக்களுடைய குரலா இல்லை ‘குடி’மக்களுடைய குரலா? எப்படிப் பார்த்தாலுமே பத்துப் ரூபாய் பாலாஜி அப்படின்னு இபிஎஸ் (EPS) கூப்பிடுறாரு. அங்க சொல்லியிருக்காரு இன்னைக்கு, மறுபடியும் செந்தில் பாலாஜியை உள்ள விட்றாதீங்க, உள்ள விட்டு ஓட ஓட விரட்டுங்க அப்படின்னு சொல்லியிருக்காரு.

ஏற்கனவே அப்படி மின்சாரத் துறையிலிருந்து வேறு வழியில்லாமல் நீக்கப்பட்டவர் தான் செந்தில் பாலாஜி. அந்த இடத்தில் பினாமியாக, அவருக்குப் பதில் ஒரு பொம்மையாக உட்கார்ந்தவர் தான் சிவசங்கர் அவர்கள். தனிப்பட்ட முறையில் நமக்கு அவர் மேல எந்தக் குறையும் இல்லை. ஆனால் அரசியல் ரீதியாக, உடன் பிறப்புகளுக்கு ஒரு செல்லப் பேர் நம்ம வச்சிருக்கோம் இல்லையா ‘கொத்தடிமைகள்’னு, அரசியல் ரீதியாக பத்துப் ரூபாய் பாலாஜி செந்தில் பாலாஜிக்கு சொன்ன இடத்தில் கையெழுத்துப் போடுவது மட்டும், அந்த கையெழுத்துப் போடுவதற்கு மட்டுமே உரிமை இருக்கக்கூடிய ஒரு கொத்தடிமை பொம்மை தான் சிவசங்கர் அவர்கள்.

அவர் உங்களுக்கு என்ன நல்லது பண்ணப் போறாரு? இன்னைக்கு இருக்கிற துறையிலேயே இன்னொருத்தர் சொல் பேச்சு கேட்டு நடக்கிறவரு, ஏற்கனவே மேலிடத்திற்கும் மன்னர் குடும்பத்திற்கும் என்ன வேணுமோ அதை மட்டும் செஞ்சுட்டுப் போயிருக்கிறவரு, மறுபடியும் இங்க வந்தா என்னங்க செய்யப்போறாரு? முதல்ல என்ன வேணுமோ அதைத் தெரிஞ்சு செய்யணும். மக்களுடைய குறையைக் கேட்கவே கேட்காதவர்களுக்கு மறுபடியும் ஓட்டுப் போட்டு இன்னும் அஞ்சு வருஷம் குன்னம் பின்னாலேயே இருக்கணுமா? கீழேயே தங்கியிருக்கணுமா?

முற்போக்கு, டெவலப்மென்ட் (Development), வளர்ச்சி இன்னும் அத்தனை மேம்பாட்டிற்கும் நீங்கள் உங்களுடைய பொன்னான வாக்கை போட வேண்டியது இரட்டை இலைக்கு! எங்கள் இலை வேட்பாளர், மிகவும் திறமையான வேட்பாளர், மிகவும் படித்த வேட்பாளர், கல்வியாளர், எம்.எட் (M.Ed) தானே படிச்சிருக்கீங்க நீங்க? பி.எட் (B.Ed), எம்.ஏ. பி.எட் (M.A. B.Ed), எம்.எஸ்சி பி.எட் (M.Sc. B.Ed). அப்ப அறிவியல் அறிவு இரண்டுக்குமான படிப்பைப் படித்தவர் திருமதி. சரண்யா அன்பழகன் அவர்கள். அன்பும் அழகும் அறிவும் ஒன்று சேர்ந்த ஒரு வேட்பாளராக இங்கே இருக்கிறார். உண்மையா சொல்றேன் நான் இவங்களைப் பார்க்கிறேன், பார்க்கும்போது என்ன தெரியுமா நினைச்சேன்? நல்ல காலம் உதயநிதி அவர்கள் உங்களுக்குப் பிரச்சாரம் பண்ணல. பண்ணியிருந்தா உடனே ஹே ஹே ஹே… ரொம்ப அழகான வேட்பாளர், அழகான எம்.எல்.ஏ (MLA)-னு சொல்லியிருப்பாரு.

அது உண்மை தான். ஆனா அதுக்காக நாம ஓட்டுப் போடலைங்க ஐயா. நாம இந்தத் தமிழகத்துக்காகவும், அம்மா ஜெயலலிதா அவர்கள் விட்டுச் சென்ற கனவுக்காகவும், இபிஎஸ் (EPS) ஐயா மறுபடியும் நல்லாட்சி தர வேண்டும் என்பதற்காகவும் ஓட்டுப் போடுறோம். சரிதானே?”

“மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். உண்மையாகச் சொல்கிறேன், இப்படிப்பட்ட ஒரு அருமையான, அமைதியான கூட்டத்தை—ஆரவாரமும் செய்கிறார்கள், அமைதியாகவும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், மிக முக்கியமாகப் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

எத்தனை பெண் பிள்ளைகள் இங்கே இருக்கிறார்கள், எத்தனை தாய்மார்கள் இங்கே இருக்கிறார்கள்! நம்ம சகோதர சகோதரிகள் எல்லாரும் கலந்து இருக்கிறார்கள் இந்தக் கூட்டத்தில். ஒரு அசம்பாவிதமும் கிடையாது. ஒரு பிரச்சனையும் கிடையாது.

ஏனென்றால், இப்பெல்லாம் புதுக்கட்சிகள்ல கூட்டம் அதிகமா வந்துருச்சு, அதனால வந்து சம்பவம் நடந்துருச்சு அப்படிங்கறாங்க. அது அவங்களுடைய வியாபாரத் தந்திரம். இங்க வந்து கத்துக்கச் சொல்லுங்க ஒரு கூட்டத்தை எப்படி கன்ட்ரோல் பண்ணனும், ஒரு நாகரிகமான கொள்கைக் கூட்டம் எப்படிச் செயல்படும், எப்படி பிஹேவ் பண்ணும் (behave) அப்படிங்கறதை இங்க வந்துப் பார்த்துக்கச் சொல்லுங்க. அந்த கட்சி வேட்பாளரை வந்துப் பார்த்துக்கச் சொல்லுங்க.

இப்படி ஒரு சிறப்பான ஏற்பாட்டைச் செய்த அதிமுக குன்னம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம் அவர்களையும்… அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் திரு. பி.என். ராமச்சந்திரன் அவர்களுக்கும், அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர் திரு. இளம்பை இரா. தமிழ்செல்வன் அவர்களுக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சந்திரகாசி அவர்களுக்கும்
கழக வழக்கறிஞர் அணித் துணைச் செயலாளர் சுப்புரெத்தினம் அவர்களுக்கும்? மாவட்டக் கழக அவைத் தலைவர் திரு. குணசீலன் அவர்களுக்கும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் திரு. முத்தமிழ்செல்வன் அவர்களுக்கும் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் திரு. ஏ. கோவிந்தன் அவர்களுக்கும்
பெரம்பலூர் எம்.ஜி.ஆர் மன்றத் துணைச் செயலாளர் பி. நாகராஜ் அவர்களுக்கும், பெரம்பலூர் அம்மா பேரவைத் துணைச் செயலாளர் திரு. வெங்கடாசலம் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. செந்தில்குமார் அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் திரு. முத்தமிழ்செல்வன் அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சி மாவட்டப் பொதுச் செயலாளர் திரு. ராமச்சந்திரன் அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சி மாவட்டப் பொருளாளர் திரு. சேகர் அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் திரு. கார்த்திகேயன் அவர்களுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் குன்னம் சட்டமன்றத் தொகுதி மாவட்டத் தலைவர் திரு. அன்பழகன் அவர்களுக்கும்
தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திரு. விஜயதர்மன் அவர்களுக்கும், ஐஜேகே பொதுச்செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள் என பேசினார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!