பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே புதிதாக தொடங்கப்பட்டுள்ளது மதுராம்பிகா கல்வி அறக்கட்டளை சார்பில் ஆல்மைட்டி வித்யாலயா (சிபிஎஸ்சி) பப்ளிக் பள்ளி. பிரி. கே. ஜி முதல் ஏழாம் வகுப்பு வரை தற்போது துவக்கப்பட்டுள்ள இப்பள்ளியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா இன்று நடைபெற்றது.

பள்ளியின் செயலாளர் ஆர்.சிவகுமார் அனைவரையும் வரவேற்றார். சேர்மன் எ.ராம்குமார் தலைமை வகித்தார். விழாவில் சி.பி.எஸ்.சி க்கான முதல் தேசிய விருதை பெற்ற கல்வியாளர் டாக்டர் பி.சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது இப்பள்ளியில் அமெரிக்க பாட திட்டத்தின்படி உருவான தரமிக்க கல்வி மற்றும் நேர்த்தியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு இந்திய மதிப்பின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் நவீன சிந்தனையுடன் உங்கள் குழந்தைகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய திரையரங்கம், வரைகலை, யோகா அரங்கம், பேசும் திறன் கொண்ட பலகைகளுடன் கூடிய வகுப்பரைகள், டிஜிட்டல் நூலகங்கள், விளையாட்டு மைதானம், கனிணி, அறிவியல் ஆய்வகங்கள் என அமைக்கப்பட்டு இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி கல்வி மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் சிறந்த பண்பாளர்களாக உருவாக வேண்டும் என்பதே ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியின் நோக்கம் என கூறினார்.

பின்னர் பள்ளியில் சேர்ந்துள்ள குழந்தைகளையே பள்ளி வகுப்பறைகளை திறக்க வைத்து மரக்கன்றுகள் வழங்கி பள்ளியில் நடப்பட்டது. விழாவில் பள்ளியின் துணை முதல்வர் சி.மோகனசுந்தரம் பி.ரவி உள்பட ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!