நிலவில் கால் தடம் பதித்த இரண்டாவது மனிதர்என்ற மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரரான பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin), தமது சொந்த பிள்ளைகளுக்கு எதிராக நிதி மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் அப்போலோ 11 குழுவில் இடம்பிடித்திருந்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும், பஸ் ஆல்ட்ரினும் நிலவிற்குச் சென்று வெற்றிகரமாக மனிதனின் முதலாவது கால் தடத்தை பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நிலவை நோக்கிய இவர்களது பயணமானது அமெரிக்கா, ரஷ்யா மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது. ஒரு வழியாக நிலவை அடைந்த ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் உற்சாகம் கலந்த பதற்றத்தில் ஏவுகணையிலேயே அமர்ந்திருந்தனர். அப்போது, நிலவின் மண்ணில் காலெடி எடுத்து வைக்குமாறு ஆல்ட்ரினுக்கு நாஸாவிலிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஏவுகணையில் இருந்து இறங்குவதற்கு ஆல்ட்ரின் தயக்கம் காட்டியதால், சமயோஜிதமாக செயல்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஏவுகணையை விட்டு இறங்கி, நிலவில் கால் பதித்த முதலாவது மனிதர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!