மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலத்திட்டங்களை 100 மணிநேரம் விளக்கும் சாதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த அஇஅதிமுக பிரமுகர் மதன் . இவர் தமது தந்தை காலம் தொட்டே அதிமுகவின் தீவிர தொண்டராக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே இவர் லயோலா கல்லூரியில் 78 மணிநேரம் தொடரந்து பேசி சாதனை படைத்துள்ளார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளரும் , முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மக்கள் நல திட்டங்களை தமது சாதனை மூலம் விளக்க திட்டமிட்டுள்ளார். அவர் சென்னை பல்கலைகழகத்தில் இந்த 100 மணி நேர சாதனையை மேற்கொள்ள இருப்பதாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற ஊடகவாதிகளின் சந்திப்பின் போது கூறினார். ஜூலை மாதம் 19-ந்தேதி முதல் 15-ந்தேத்தி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் அம்மா உணவகம், இலவச சைக்கிள் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், முதியோர் அரவணைப்பு, மாற்றுதிறனாளிக ளுக்கான சலுகை திட்டங்கள், மாணவர், இளைஞர், திருநங்கைகள், ஆதரவற்றவரகள் என பல தரப்பினருக்கு ஜெயலலிதா ஆற்றிய பணிகளை தற்போது தொடரும் திட்டங்களை தாம் விளக்கி பேச இருப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் நாடாளுமன்ற சட்டபேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

 


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!