ijk (1)பெரம்பலூர் : தமிழகத்தில் உள்ள அடிமை ஆட்சியை இந்த தேர்தல் மூலம் அகற்றவேண்டும் என இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து கூறினார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் இ.ஜ.க. (ஐ.ஜே.கே) தேர்தல் அலுவலத்தை திறந்து வைத்து வேட்பாளர் அசோகனை ஆதரித்து இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பச்சமுத்து நேற்று பேசியதாவது:

உலக வரைப்படத்தில் இந்தியா வரைபடம் உள்ளது. ஆனால் பிரதமம் மோடி பதவியேற்றபின்னர் உலக அளவில் இந்தியா புகழ்ப்பெற்றது. அப்படி புகழ்பெற்ற கட்சியான பாரதிய ஜனதா கட்சியுடம் இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி வைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

திமுகவும் அதிமுகவும் மாறி மாறி 45 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து உள்ளதுஇ ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது திமுக அதிமுக இரண்டு கட்சியுமே மது விலக்கை அமுல்படுத்தவில்லை.

மது விற்பனையை அதிகரித்து 1 கோடியே 30 லட்சம் குடும்பங்களை பாழ்படுத்தி உள்ளனர். ஆனால் இப்போது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மது விலக்கை அமுல்படுத்தப்படும் என கூறுகிறது.

இது என்ன திருப்பதி கோவில் படியா ? திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்கிறது. ஏன் இதுவரை திமுக ஆட்சி புரியவில்லையா? இரண்டு கட்சியுமே மக்களை ஓட்டுக்காக ஏமாற்றுகிறார்கள்.

நாட்டில் மது விலக்கை அமுல்படுத்தப்பட வேண்டும். திமுக என்றால் 2ஜீ பெக்டரம் வழக்கு, அதிமுக என்றால் சொத்து குவிப்பு வழக்கு, பா.ம.க ஊழல் வழக்கு என ஊழல் குற்றவாளிகள் தான் முதல் அமைச்சராக வேண்டுமா? ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும்.

லட்சகணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் கொண்டு வரப்படும். தமிழகத்தில் அடிமை ஆட்சி நடக்கிறது – அதை அகற்ற வேண்டும். ஊழல் அற்ற ஆட்சி அமைய கத்திரிகோல் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

இதை தொடர்ந்து குன்னம் உட்பட பல்வேறு கிராமங்களில் தேர்தல்பிரச்சாரம் மேற்கொண்டார். நிகழ்ச்சிகளில் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!