துபாயில் இறந்த தந்தையின் சடலத்தை மீட்டுத்தரக்கோரி அவரது மகன் வேல்முருகன், ஆட்சியர் தரேஷ்அஹமதுவிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலுார் மாவட்டம் நமையூர் கிராமத்தை சேர்ந்த எனது தந்தை மணிவேல் என்பவர் கடந்த ஒன்பது வருடங்களாக துபாய் நாட்டில் கூலி வேலை செய்துவந்தார். கடந்த ஆண்டு டிச., 26ம் தேதி நடந்த விபத்தில் அவர் இறந்துவிட்டதாக அங்கிருந்து எங்கள் செல்போனுக்கு தகவல் வந்தது.

எனது தந்தையின் சடலத்தை ஊருக்கு எடுத்துவர நண்பர் மூலமாக ஏற்பாடு செய்தேன். தற்போது சடலம் ஊருக்கு வருவதற்கு பணம் தடையாக உள்ளது. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவரும் எனக்கு வசதி இல்லாததால் அதற்கான தொகையை செலுத்த முடியவில்லை. எனவே எனது அப்பாவின் சடலத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் தரேஷ்அஹமது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News - Kalaimalar.

error: Content is protected !!