National Deworming Camp: Started by Collector Venkata Priya in Perambalur

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாமினை கலெக்டர் வெங்கடபிரியா எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

இந்த முகாம் 14.03.2022 அன்று முதல் 21.03.2022 அன்று வரை நடைபெறுகிறது. 1 முதல் 19 வயதிலான அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிலான பெண்களுக்கும் குடற்புழுநீக்க மாத்திரை (அல்பென்டசோல்) வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2,07,407 நபர்களுக்கு குடற்புழுநீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இதனால், குழந்தைகளின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமலும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவும். மேலும் பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்களிலும் தன் சுத்தம் பற்றியும், திறந்தவெளயில் மலம் கழித்தலை தவிர்த்தல் பற்றியும், கை கழுவும் முறைகள் பற்றியும் நலக்கல்வி வழங்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் நிறைமதி, மாவட்ட சேர்மன் சி.ராஜேந்திரன், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகாராஜேந்திரன், சி.இ.ஓ. அறிவழகன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் செதில்குமார், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, திமுக முக்கிய பிரமுகர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


படவிளக்கம்:

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாமினை கலெக்டர் வெங்கடபிரியா எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலையில் தொடங்கி வைத்த போது எடுத்தப்படம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!