பெரம்பலூர்: தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் தகவல்.

தோட்டக்கலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தின்கீழ் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்திற்கு 205-16-ம் ஆண்டிற்கு 168.267 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், மா அடர்நடவிற்கு 30 எக்டருக்கு, எக்டருக்கு ரூ.9840. என ரூ.2.952 இலட்சமும், மா இயல்பான நடவிற்கு 10 எக்டருக்கு, எக்டருக்கு ரூ.7680. என ரூ.0.768 இலட்சமும், எலுமிச்சை சாகுபடிக்கு 15 எக்டருக்கு, எக்டருக்கு ரூ.12 ஆயிரம் . என ரூ.1.80 இலட்சமும், வீரிய காய்கறிகள் சாகுபடி செய்ய 75 எக்டருக்கு, ஒரு எக்டருக்கு ரூ. 20 ஆயிரமும்- என 15 இலட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

மானியத் தொகைக்கு நடவு பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. திசு வாழை சாகுபடிக்கு 20 எக்டருக்கு, எக்டருக்கு ரூ.30750ஃ- என ரூ.6.150 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மானிய தொகைக்கு திசு வாழை கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

மலர்கள் இனத்தில் இதர விவசாயிகளுக்கு கிழங்கு வகை (சம்பங்கி) மலர்கள் சாகுபடிக்கு 25 எக்டருக்கு, எக்டருக்கு ரூ.37500. என ரூ.9.375 இலட்சமும், உதிரி மலர்கள் (சாமந்தி பூ, கனகாம்பரம், மல்லிகை) சாகுபடிக்கு 30 எக்டருக்கு, எக்டருக்கு ரூ.10 ஆயிரம் என ரூ.3.0 இலட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

மிளகாய் சாகுபடிக்கு 10 எக்டருக்கு, ஒரு எக்டருக்கு ரூ.12 ஆயிரம் என ரூ.1.20 இலட்சமும் மஞசள் சாகுபடிக்கு 25 எக்டருக்கு, எக்டருக்கு ரூ.12 ஆயிரம் என ரூ.3.0 இலட்சமும், பெரிய வெங்காயம் சாகுபடிக்கு 300 எக்டருக்கு ஒரு எக்டருக்கு ரூ.12 யஆயிரம் என 36 இலட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மானியத் தொகைக்கு நடவுப்பொருள் மற்றும் இடுபொருட்கள் மானிய விலையில் விவசாயிக்கு வழங்கப்பட உள்ளது.

பாதுகாக்கப்பட்ட சாகுபடி இனத்தின்கீழ் பாலித்தின் பசுமைக் குடில் அமைக்க ஒரு சதுர மீட்டருக்கு ரூ.445 வீதம் 1000 சதுர மீட்டருக்கு ரூ.4.45 இலட்சமும், நிழல்வலை அமைக்க ஒரு சதுர மீட்டருக்கு ரூ.355 வீதம் 2000 சதுர மீட்டருக்கு 7.10 இலட்சமும், நெகிழி மூடாக்கு அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.16000ஃ- வீதம் 60 எக்டருக்கு ரூ.9.60 இலட்சமும் மானியமாக வழங்கப்படவுள்ளது.

மண்புழு உரம் தயாரித்தல் இனத்தில் நிரந்தர அமைப்பு தொட்டி அமைத்து மண்புழு உரம் தயாரிக்க 5 எண்களுக்கு ஒரு யூனிட்டிற்கு ரூ.50 ஆயிரம் வீதம் 2.50 இலட்சமும், தற்காலிக அமைப்பிற்கு 5 எண்களுக்கு ஒன்றுக்கு ரூ.8 ஆயிரம்- வீதம் ரூ.0.40 இலட்சமும் மான்யம் வழங்கப்பட உள்ளது.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மைக்கு 40 எக்டர் இலக்கு பெறப்பட்டு ஒரு எக்டருக்கு ரூ.12ஆயிரம் வீதம் இடுபொருட்கள் வழங்கப்படவுள்ளது.

விவசாயிகளுக்கு மாநிலத்திற்குள் பயிற்சியளிக்க நபர் ஒன்றுக்கு ரூ.3யுஆயிரம் வீதம் 20 விவசாயிகளுக்கு 0.60 இலட்சமும்,

வெளி மாநிலத்திற்குள் கண்டுணர் சுற்றுலாவிற்கு நபர் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் 20 நபர்களுக்கு 1.20 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என ஆட்சியர் மதுசூதன் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!