01-election-commission-of-indiaபெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு.க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:

நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து 147.பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நேற்றுடன் (29.4.2016) முடிவடைந்ததால் இன்று (30.4.2016) காலை 11 மணி முதல் தேர்தல் நடத்தும் அலுவலரர் அலுவலகங்களில் வேட்பு மனுக்களுக்கான பரிசீலனை நடைபெற்றது.

வேட்புமனுக்களுக்கான பரிசீலனை முடிவில் 147.பெரம்பலூர் (தனி) தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 21 வேட்புமனுக்களில் 16 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
5 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட 16 மனுக்களில் ஒருவரே ஒன்றிற்கும் மேற்பட்ட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் அவற்றில் ஒன்றை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு 15 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதிசெய்யப்பட்டுள்ளது.

குன்னம் சட்டமன்றத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 28 வேட்புமனுக்களில் 19 மனுக்கள் ஏற்கப்பட்டது. 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட 19 மனுக்களில் ஒருவரே ஒன்றிற்கும் மேற்பட்ட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதால் அவற்றில் ஒன்றை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு 14 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

147.பெரம்பலூர் (தனி) சட்ட மன்றத் தொகுதியில் அஇஅதிமுக சார்பில் இரா.தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் பி.சிவகாமி , தேமுதிக சார்பில் கி.ராஜேந்திரன், பாரதீயஜனதா கட்சி சார்பில் மு.கலியபெருமாள், தேசியவாக காங்கிரஸ் சார்பில் ஆ.குணசேகரன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் நெ.அருண்குமார், தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் பெ.குணாளன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மு.சத்தியசீலன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பெ.பாலச்சந்திரன், சிவசேனா சார்பில் சி.பிச்சைமுத்து ஆகிய நபர்ளின் வேட்பு மனுக்களும், சுயேட்சையாக வேட்புமனு செய்த ப.குருசாமி, செ.செல்லையா, து.பரமசிவம், ப.பன்னீர்செல்வம், ஜெ.வேல்முருகன் ஆகியோரின் வேட்புமனுக்களும் என மொத்தம் 15 நபர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

148. குன்னம் சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக சார்பில் ஆர்.டி.ராமச்சந்திரன், திமுகவின் சார்பில் டி.துரைராஜ், பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் கே.ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் பி.அருள், லோக் ஜனசக்தி கட்சி சார்பில் வி.பி.சிவராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜெ.முகமது ஷானவாஸ், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஏ.வி.ஆர். ரகுபதி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜி.வைத்திலிங்கம் ஆகிய நபர்களின் வேட்பு மனுக்களும், சுயேட்சையாக போட்டியிடும் வி.ராஜன், என்.சிலம்பரசன், பி.செந்தில்குமார், எம்.செந்தில்குமார், ஆர்.துரைராஜ், எம்.ராமலிங்கம் ஆகிய நபர்களின் வேட்பு மனுக்களும் என மொத்தம் 14 நபர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற மே2 ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்படும். என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!