THALIKKU-THANGAMபெரம்பலூரில் முதலமைச்சரின் சிறப்புத் திட்டத்தின்கீழ் 944 பயனாளிகளுக்கு 3,30,25,000 மதிப்பில் திருமண நிதியுதவியையும், ரூ.97,75,120 மதிப்பிலான தங்கத்தையும் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் வழங்கினர்.

ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் டாக்டர; தரேஸ் அஹமது தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி வருகிறார;கள். குறிப்பாக பெண்களின் கல்வித்தரத்ததை உயர;த்தும் வகையில் வேப்பு+ர; மற்றும் வேப்பந்தட்டையில் அரசு கலை அறிவியல் கல்லுhரிகளை வழங்கி பெருமை சேர;த்துள்ளார;கள். அதுமட்டுமல்லாது ஆலத்துhரில் விடுதியுடன் கூடிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை வழங்கி ஆணையிட்டுள்ளார;கள். இரூரில் உள்ள ஆலத்துhர; வட்டாட்சியர; அலுவலகத்தில் தற்காலிகமாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலும், ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பிக்க கடைசிதேதி 18.1.2016 ஆகும். அதுமட்டுமல்லாது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றது.

இதுபோன்ற தேர்வுகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இன்று வருகைதந்திருக்கும் தாய்மார்கள் அனைவரும் உங்கள் பகுதியில் உள்ள படித்த பெண்களை இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு படித்த ஏழை பெண்ளுக்கு 16.5.2011 முதல் 21.3.2015 வரை ரூ.25,000 நிதியுதவியுடன் தலா 4 கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் 3,273 பயனாளர்களுக்கு ரூ. 8 கோடியே 18 லட்சத்து 25 ஆயிரம் நிதியுதவியும், ரூ.3 கோடியே 92 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலான 13,092 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பட்டம் மற்றும் பட்டயம் படித்த ஏழைப்பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவியுடன், தலா 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,555 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவியும், ரூ.1 கோடியே 86 லட்சத்து 60 ஆயிரம் மதிப்லான 6,220 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் 944 பயனாளிகளுக்கு 3,30,25,000 மதிப்பிலான நிதியுதவியும், ரூ.97,75,120 மதிப்பிலான 3 கிலோ 776 கிராம் தங்கமும் வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார;.

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது:

தமிழக முதலமைச்சர் பெண்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கருவறை முதல் கல்லறை வரை அரசின் திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு விலையில்லா நோட்டு, புத்தகங்கள், சீருடை, காலணி, மடிக்கணினி, மதிவண்டி, கல்வி உதவித்தொகைகள் என எண்ணற்ற திட்டங்களை வழங்கிவருபவர் தமிழக முதலமைச்சர் திருமணம் ஆகும் பெண்பிள்ளைகள் 10ஆம்வகுப்பு முடித்தால் 25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு முடித்திருந்தால் 50,000 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் வழங்கி அழகு பார்ப்பவர் தமிழக முதலமைச்சர், எனவே, பெண் சமுதாயம் முன்னேற பல திட்டங்களை வழங்கும் முதலமைச்சர் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம் என்றார்.

சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் பேசியதாவது:

பின்தங்கிய மாவட்டமாக இருந்த பெரம்பலூருக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி முன்னேறும் மாவட்டமாக மாற்றியவர் தமிழக முதலமைச்சர் கர்ப்பிணித் தாய்மார்கள் உடல்நலத்தைப் பேணிக்கான ஊக்கத்தொகை, குழந்தை பிறந்தவுடன் தேவையான அனைத்துப் பொருட்களும் அடங்கிய குழந்தை நலப்பெட்டகம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு விலையில்லாப் பொருட்கள், திருமணமாகும் பெண்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல் 4 கிராம் தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவி என்று பெற்றோர;களை காட்டிலும் அதிக அக்கறையுடன் தமிழ்நாட்டு மக்களை நேசித்து நலத்திட்டங்களை வழங்கி வருபவர் தமிழக முதலமைச்சர் வேப்பந்தட்டையில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி விசுவகுடி நீர்த்தேக்கத்திட்டம், ஆலத்தூரில் விடுதியுடன் கூடிய அரசு தொழிற்பயிற்சி நிலையம், பாடாலூரில் புதிய பால்பண்ணை என பெரம்பலூர் மாவட்டத்திற்கு அடுக்கடுக்கான பல திட்டங்களை வழங்கி வரும் தமிழக முதலமைச்சர் பெரம்பலூர் மாவட்ட மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் சி.இரமேஷ், நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் ந.கிருஷ்ணகுமார், ரா.வெண்ணிலா, க.ஜெயலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் உட்பட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!