பெரம்பலூர் : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் தொடர்பான பதிவேடுகள் பராமரிப்பு குறித்த வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் பொது பார்வையாளர் விஷ்ணு முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் நந்தகுமார் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 77(1)ன்படி, சட்டப்பேரவைக்கு போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனியாக ஒரு வங்கிக் கணக்கு வைத்து பராமரிக்க வேண்டும். அந்தக் கணக்கு சரியானதாகவும், தாம் செய்த அனைத்து தேர்தல் செலவுகளையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அனைத்து வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த நாள் முதல் தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள் வரை இந்தக் கணக்கினை பராமரிக்க வேண்டும். ரூ.28 லட்சம் – (ரூபாய் இருபத்திஎட்டு இலட்சம் மட்டும்) வரை ஒவ்வொரு வேட்பாளரும் செலவு செய்யலாம். நிர்ணயிக்கப்பட்ட வரம்பினை மீறி செலவு செய்தால் அது தேர்தல் விதிமுறை மீறலாகும். வேட்பாளர் தாக்கல் செய்யும் செலவு கணக்கினை இந்திய தேர்தல் ஆணையம் துல்லியமாக ஆய்வு செய்யும்.

வேட்பாளர் செலவுக் கணக்கு சரியாக இல்லாமலும், உண்மைக்கு மாறாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 10(A)ன்படி வேட்பாளர்தகுதி நீக்கம் செய்யப்படுவார். செலவுக் கணக்கினை தேர்தல் செலவின பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் கோரும்போது தணிக்கைக்கு ஆஜர்படுத்த வேண்டும்.

தேர்தல் முடிவு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் செலவினக் கணக்கினை முழுமையாக மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்யவேண்டும். வரையறுக்கப்பட்ட தேதிக்குப் பின்னர் வெற்றிபெற்ற வேட்பாளர் கணக்கு தாக்கல் செய்தால், அதனை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் தேர்தல் மனு அளித்திட வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே, குறித்த நாட்களுக்குள் தேர்தல் செலவுக்கணக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்களான பறக்கும்படை குழு , வீடியோ கண்காணிப்பு குழு , வீடியோ பார்க்கும் குழு மூலம் பெறப்படுகின்ற அறிக்கைகளை ஆய்வு செய்து வேட்பாளர் செலவு எனில் வேட்பாளர் கணக்கிலும், கட்சியின் செலவு எனில் கட்சி கணக்கிலும் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

தேர்தல் செலவினை கணக்கிடும் குழுவினர் பல்வேறு தரப்பட்ட விலைப்பட்டியலின் அடிப்படையில் வேட்பாளர் வாரியாக கணக்கீடு செய்து தொகையினை நிழல் கண்கானிப்பு பதிவேட்டில் பதிவு செய்வர். ஆதாரங்கள் கோப்பு -ம் உடன் பராமரிக்கப்படும்.

தேர்தல் செலவு செய்யத் தேவையான தொகையினை, பண வரவு எந்த வகையாக இருந்தாலும், வேட்பாளரின் சொந்தப் பணமாக இருந்தாலும், இந்த வங்கிக் கணக்கில் வரவு வைத்துத்தான் செலவு செய்ய வேண்டும். தேர்தல் செலவுக் கணக்கினை தேர்தல் முடிவு வெளிடப்பட்ட பின் இந்த வங்கிக் கணக்கின் உண்மை நகலுடன் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு கணக்கு தாக்கல் செய்யப்படவேண்டும். வங்கிக் கணக்கு வேட்பாளரின் பெயரிலோ அல்லது வேட்பாளர் மற்றும் அவரது முகவர் பெயரில் கூட்டாகவோ ஆரம்பிக்கலாம்.

வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளருக்கு தேர;தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்டுள்ள தேர;தல் செலவு கணக்கு பதிவேட்டில் பகுதி-அ – தினசரி கணக்கு எழுதுதல் – வௌ;ளைப் பக்கம் , பகுதி-ஆ- பணப் பதிவேடு , பகுதி-இ – வங்கிப் பதிவேடு ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. இதில் தினசரி கணக்கு பராமரிப்பு என்பது 9 கலம் கொண்டது. இப்பதிவேட்டை தினம் பராமரிக்க வேண்டும். ஏதேனும் ஒரு நாளில் செலவு ஏதும் செய்யப்படவில்லையெனில் விடை என்று எழுத வேண்டும். 9 கலங்களையும் சரியாக பூர்த்தி செய்வதுடன் தேர;தல் செலவுக்கு கொடுக்கப்பட்ட தொகைகள், நிலுவையாக உள்ள தொகைகள் குறித்தும் எழுதப்படவேண்டும்.

ரொக்கப்ப் பதிவேடு என்பது பணமாக பெறப்பட்ட விபரம், வங்கியிலிருந்து பணம் எடுத்த விபரம் தேதி வாரியாக வேட்பு மனு தாக்கல் முதல் முடிவு அறிவிக்கும் நாள்வரை பராமரிக்க வேண்டும்.

வரவுப் பகுதியில் தனி நபரிடமிருந்து பெறப்படுகின்ற தொகை, வங்கியிலிருந்து தேர;தல் கணக்கிலிருந்து பெறப்பட்ட தொகையையும் வரவுக் கலத்தில் எழுத வேண்டும். செய்யப்பட்ட அனைத்து செலவுகளும் Pயலஅநவெ கலத்தில் குறிப்பிட வேண்டும். வரவு செலவு இல்லையெனில் “இல்லை” அல்லது “ஆம்” எனக் குறிப்பிட வேண்டும். தேதி வாரியாக பண இருப்பு தெரிவிக்கப்பட வேண்டும்.

வங்கிப் பதிவேட்டில் வேட்பாளர் தமது தேர்தல் செலவுக்குரிய அனைத்து தொகையையும் தமது சொந்தப் பணம் உட்பட இந்த வங்கிக் கணக்கில் வரவு செய்ய வேண்டும். அனைத்து செலவினங்களும் இந்த வங்கிக் கணக்கிலிருந்து குறுக்கு கோடிட்ட காசோலைகள் மூலமாக வழங்க வேண்டும்.

ரூ.20,000- (ரூபாய் இருபது ஆயிரம் மட்டும்) வரை பணமாக பட்டுவாடா செய்யலாம். இதற்கு தக்க இரசீதுகள் பராமரிக்க வேண்டும். தினசரி வரவு, பணம் எடுத்தல் மற்றும் தினசரி இருப்புத் தொகை குறித்து தக்க பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். வரவு அல்லது பணம் எடுத்தல் ( இல்லாத நாட்களில் “இல்லை” அல்லது “ Nil ” எனப் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வேட்பாளர் அல்லது அவரது முகவர் அங்கீகாரக் கடிதத்துடன் தேர்தல் கணக்கினை கணக்கு பார்வையாளர் முன்பாக குறைந்தபட்சம் மூன்று முறை ஆஜர்படுத்த வேண்டும்.

அதன்படி வருகின்ற 06.05.16, 10.05.16 மற்றும் 14.05.16 ஆகிய மூன்று நாள்களும் வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்கள் குறித்து கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வேட்பாளரின் தேர்தல் செலவினங்களுடன் செய்தித்தாள், டிவி, கேபிள்-உள்ளூர் டிவி விளம்பரங்களுடன் வேட்பாளருக்கு சாதகமாக அவரின் சாதனைகள் பற்றியோ அவர் நற்பண்பு கொண்டவர் மக்களுக்கு நன்மைகள் செய்வார் என்றோ பத்திரிக்கைகள் செய்தி போல் வெளியிடப்படுகின்ற விவரங்களும் வேட்பாளர் செலவு செய்து விளம்பரம் கொடுத்ததாகவே கட்டண விளம்பரமாக வேட்பாளர் கணக்கில் கணக்கிடப்படும். மேற்படி செலவினங்கள் வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படுவதுடன் வேட்பாளருக்கு அறிவிப்பு வழங்கப்படும், என ஆட்சியர் பேசினார்.

இக்கூட்டத்தின் போது, கூடுதல் செலவினப் பார்வையாளர் பிஜுதாமஸ், வருமான வரித்துறை குறித்த செயல்பாடுகளை கண்காணிக்கும் சிறப்பு அலுவலர் ராமலிங்கம். மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி, உள்பட உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!