100 feet long untouchability wall near Perambalur will be demolished! Action by Communist Party Complaint!!
பெரம்பலூர் மாவட்டம், பாடலூர் கிராமத்தில் இருந்து தெரணி கிராமத்திற்கு செல்லும் வழியில், 4 சமூகத்தை சேர்ந்த மக்கள் அங்குள்ள புறம்போக்கு இடத்தில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கழிப்றை, குளியலறை, மற்றும் 1972 ல் வெட்டப்பட்ட பொதுக்கிணறு என பயன்படுத்தி வந்தாக கூறப்படுகிறது.
இதற்கு செல்லும், வழியை சுமார் ஒன்றரை ஒரு வருடத்திற்கு முன்பாக, தனிநபர்களால், மறித்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட, 100அடி நீளம், சுமார் 10 அடி உயரமுள்ள தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளதாக, பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பியிடம் மனு கொடுத்தனர். இது குறித்து போராட்டமும் செய்ய அறிவிப்பு செய்த நிலையில் , இன்று அரசு அதிகாரிகளால் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
இதற்கு பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.