1000 kg of dog meat seized in Egmore Railway Station in Chennai biryani likers .. surprise!
சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து, ரயில் வழியாக சென்னைக்கு பேக்கிங் செய்து கொண்டுவரப்பட்ட நாய்க்கறிகள், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டபோது பிடிபட்டது. ரயில்வே போலீசாருக்கு கிடைத்த, ரகசிய தகவலைத் தொடர்ந்து, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாட்டுக்கறி என்று, கூறிக்கொண்டு நாய்க்கறியை அவர்கள் கொண்டு வந்தது, சோதனையில் தெரியவந்துள்ளது.
சென்னை உட்பட தமிழகம் முழுக்க, நாய்க்கறியை சில ஹோட்டல்கள், தாபாக்களுக்கு சப்ளை செய்யும் நோக்கத்தில் இது கொண்டுவரப்பட்டிருக்கிறாதா என விசாரணை நடந்து வருகிறது. நாய்க்கறியை எந்தெந்த ஹோட்டல்கள் வாங்குகின்றன என்ற தகவல்கள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் சில ஹோட்டல்களில், பிரியாணியில், மட்டனுக்கு பதில், நாய்க்கறி கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது கடந்த கால செய்திகள். இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.