Perambalur: VCK meeting passes resolution to construct a bus shelter with drinking water and toilet facilities at the ‘4 Road’ junction.

பெரம்பலூர் நகர கிழக்கு விசிக செயற்குழு கூட்டம் நகர செயலாளர் தென்றல் சரண்ராஜ் தலைமையில் நடந்தது மாவட்ட அமைப்பாளர் குணா வரவேற்றார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், துறைமங்கலம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணியை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 4 ரோட்டில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியோடு பேருந்து நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் நகரத்தில் நடைபெற்று வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைமங்கலம் சமூதாய கூடத்தை தரம் உயர்த்தியும், உணவு அருந்தும் கூடம், சமயற்கூடம் அமைத்து சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட பொருளாளர் பிச்சைப்பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் அழகுமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்க.சண்முகசுந்தரம் அய்யாக்கண்ணு, வெற்றியழகன், கேட் மணி நிர்வாக குழு உறுப்பினர்கள் காட்டு ராஜா, ஸ்டாலின் லால், இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள், மாநில செயலாளர் வீர செங்கோலன், முன்னாள் மண்டல செயலாளர் இரா. கிட்டு, மன்னர் மன்னன், மண்டல துணைச் செயலாளர், ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நகர துணை செயலாளர்கள் ஜீவா, தமிழரசன், நகர இ.எ.பா அமைப்பாளர் அழகுதாசன், நகர துணை அமைப்பாளர்கள் தீரன், சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் ஆழ்வார் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!